Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • விரைவில் சட்டபூர்வமாக இளநிலை, முதுநிலை நீட் தேர்வுகளுக்கான விலக்கு கிடைக்க வாய்ப்பு ..அமைச்சர் மா.சுப்பிரமணியன்

விரைவில் சட்டபூர்வமாக இளநிலை, முதுநிலை நீட் தேர்வுகளுக்கான விலக்கு கிடைக்க வாய்ப்பு ..அமைச்சர் மா.சுப்பிரமணியன்

By: vaithegi Fri, 22 Sept 2023 3:29:59 PM

விரைவில்  சட்டபூர்வமாக இளநிலை, முதுநிலை நீட் தேர்வுகளுக்கான விலக்கு கிடைக்க வாய்ப்பு   ..அமைச்சர் மா.சுப்பிரமணியன்

சென்னை: விரைவில் நீட் தேர்விற்கான சட்டப்பூர்வ விலக்கு ... நாட்டில் மருத்துவ படிப்புகளுக்கான பல்கலை மற்றும் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கையானது நீட் தகுதி தேர்வை அடிப்படையாக வைத்து நடத்தப்படுகிறது. 12-ம் வகுப்பு இறுதி மதிப்பெண்கள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுவதில்லை.

மேலும், நீட் தேர்வு CBSE பாட திட்டத்தின் படி நடத்தப்படுகிறது. இதனால் மாநில கல்வி வாரியத்தின் பாடத்திட்டத்தில் பயின்ற மாணவர்கள் அதிக மதிப்பெண்களை எடுப்பது பெரும் சிரமமான காரியமாக உள்ளது.

neet exam,minister m. subramanian , நீட் தேர்வு,அமைச்சர் மா.சுப்பிரமணியன்

இதனால் தமிழகத்தில் நீட் தேர்வு விலக்கு அளிக்கப்பட வேண்டும் என நீண்ட காலமாக கோரிக்கைகளிருந்து கொண்டு வருகிறது. இந்நிலையில், மத்திய அரசு நடப்பாண்டு நீட் தேர்வில் கலந்து கொண்டாலே நீட் கலந்தாய்வுக்கு வரலாம் என தெரிவித்துள்ளது.

இதையடுத்து இது குறித்து தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் அவர்கள், நீட் தகுதி தேர்வு தேவையற்றது என்பதை மத்திய அரசே ஒப்புக் கொள்ள தொடங்கி விட்டது. இதனால் சட்டபூர்வமாக இளநிலை, முதுநிலை நீட் தேர்வுகளுக்கான விலக்கு கிடைக்க வாய்ப்புகள் உள்ளதாக செய்தியாளர்களிடம் அமைச்சர் தெரிவித்து உள்ளார்.

Tags :