Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • கொரோனா பரவல் உயர்ந்தாலும் மக்கள் பதற்றப்பட தேவையில்லை ... அமைச்சர் மா.சுப்பிரமணியன்

கொரோனா பரவல் உயர்ந்தாலும் மக்கள் பதற்றப்பட தேவையில்லை ... அமைச்சர் மா.சுப்பிரமணியன்

By: vaithegi Tue, 21 Mar 2023 4:06:44 PM

கொரோனா பரவல் உயர்ந்தாலும்  மக்கள் பதற்றப்பட தேவையில்லை ...  அமைச்சர் மா.சுப்பிரமணியன்

சென்னை: தமிழகத்தில் அதிகரித்து வரும் கொரோனா பரவல் குறித்து, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று ஆலோசனை நடத்தினார். தமிழகத்தில் கடந்த சில நாட்களாகஏ கொரோனா தொற்று தொடர்ந்து உயர்ந்து கொண்டே வருகிறது. இதனை அடுத்து நேற்று ஒரே நாளில் புதிதாக 76 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், சென்னை தலைமை செயலகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் பற்றி அதிகாரிகளுடன் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று ஆலோசனை நடத்தினார்.அதன் பின்னர் செதியாளர்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது:

minister m. subramanian,corona ,அமைச்சர் மா.சுப்பிரமணியன்,கொரோனா

தமிழகத்தில் ஒமைக்ரான் எக்ஸ்.பி.பி, பிஎ2 வகை வைரஸ் பரவி கொண்டு வருகிறது. தமிழ்நாட்டில் 2 மாதம் முன்பு தினசரி தொற்று 2 என்ற எண்ணிக்கையில் இருந்த தொற்று எண்ணிக்கை தற்போது 70 ஆக அதிகரித்துள்ளது. மராட்டியம், குஜராத், கேரளா, கர்நாடகாவில் கொரோனா தொற்று பாதித்தவர்கள் எண்ணிக்கை உயர்ந்து கொண்டு வருகிறது.துபாய், சிங்கப்பூர் போன்ற வெளிநாடுகளில் இருந்து வருவோரிடம் பரிசோதனை செய்யப்படுகிறது.

ஆனால்தமிழ்நாட்டில் பரவி வரும் கொரோனாவால் பெரியளவில் பாதிப்பு இல்லை. வெளிநாடுகளிலிருந்து வருவோரால் தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு உயர்ந்து வருகிறது. கொரோனா அதிகரித்தாலும் தமிழ்நாடு பாதுகாப்பாக இருக்கிறது. மக்கள் பதற்றப்பட தேவையில்லை. மேலும் 2 ஆயிரம் மெட்ரிக் டன் அளவிற்கு ஆக்சிஜனை சேமித்து வைக்கும் திறன் அரசு மருத்துவமனைகளில் உள்ளது. கொரோனா 2-ம் அலையின் போது தயார் செய்த படுக்கை வசதிகள் நம்மிடம் தயார் நிலையில் உள்ளன என அவர் கூறினார்.

Tags :