Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • தமிழக விமான நிலையங்களில் வெளிநாட்டு பயணிகளுக்கு நாளை முதல் கொரோனா பரிசோதனை .. அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவிப்பு

தமிழக விமான நிலையங்களில் வெளிநாட்டு பயணிகளுக்கு நாளை முதல் கொரோனா பரிசோதனை .. அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவிப்பு

By: vaithegi Fri, 23 Dec 2022 10:29:21 AM

தமிழக விமான நிலையங்களில் வெளிநாட்டு பயணிகளுக்கு நாளை முதல் கொரோனா பரிசோதனை   ..  அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவிப்பு

சென்னை: இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த மமருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்ததாவது :-வெளிநாட்டு பயணிகளுக்கு தமிழக விமானங்களில் நாளை முதல் ஆர்டிபிசிஆர் கொரோனா பரிசோதனை நடத்தப்படும் என்றார்.

அதனை தொடர்ந்து பேசிய அவர், தமிழகத்தில் கொரோனா பரிசோதனை மருந்துகள் 6-மாத காலத்திற்கு தேவையான அளவு இருப்பு உள்ளது. மருத்துவமனைகளில் படுக்கைகள், ஆக்சிஜன் சிலிண்டர்கள் கையிருப்பில் உள்ளது.

m. subramanian,corona test,airport , மா.சுப்பிரமணியன் , கொரோனா பரிசோதனை,விமான நிலையம்

மருந்து தயாரிக்கும் நிறுவனங்கள் தடுப்பூசிகள் தயாரிப்பதை நிறுத்தியுள்ளதால் தமிழகத்தில் தடுப்பூசிகள் கையிருப்பில் இல்லை. தமிழகத்தில் ஒற்றை இலக்கத்திலேயே கொரோனா பாதிப்பு உள்ளது. 6 மாதங்களாக கொரோனாவுக்கு எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை.

எனவே இதன் காரணமாக கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஜப்பான், தென் கொரியா, ஹாங்காங் நாடுகளில் இருந்து தமிழ்நாட்டுக்கு வரும் பயணிகளுக்கு நாளை முதல் பரிசோதனை என அவர் கூறினார்.

Tags :