Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • வால்பாறைக்கு ஆய்வுக்கு செல்லும் வழியில் ஆலோசனை மேற்கொண்ட அமைச்சர் முத்துசாமி

வால்பாறைக்கு ஆய்வுக்கு செல்லும் வழியில் ஆலோசனை மேற்கொண்ட அமைச்சர் முத்துசாமி

By: Nagaraj Thu, 06 July 2023 6:47:15 PM

வால்பாறைக்கு ஆய்வுக்கு செல்லும் வழியில் ஆலோசனை மேற்கொண்ட அமைச்சர் முத்துசாமி

பொள்ளாச்சி: தமிழக முதல்வர் உத்தரவின் பேரில் வால்பாறை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் தொடர் மழையின் காரணமாக வெள்ள அபாயம் குறித்து ஆய்வுக்காக அமைச்சர் முத்துசாமி வால்பாறை செல்லும் வழியில் உடுமலை ரோடு பொதுப்பணித்துறை ஆய்வு மாளிகையில் மாவட்ட ஆட்சித் தலைவர் காந்தி குமார் பாடி ஆலோசனை மேற்கொண்டார்

இதனைத் தொடர்ந்து புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள இளைஞர் அணி அமைப்பாளர் சபரி கார்த்திகேயன் மற்றும் துணை அமைப்பாளர்கள் புவனேஷ் ,சல்மான் கான் நாசர் ,இருகூர் உதய பூபதி ,சபரி கிருஷ்ணன் , மணிமாறன் தென்றல் , நிஷாந்த் , திருமலை ராஜா உள்ளிட்ட இளைஞரணி நிர்வாகிகள் வாழ்த்து பெற்றனர்

பின்பு செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் கூறுகையில் தமிழகத்தில் தமிழக முதலமைச்சர் அனைத்து மாவட்டங்களிலும் மலைக்கால பாதிப்புகள் குறித்து முன்னெடுப்பு நடவடிக்கைகளை மேற்க்கொண்டு வருகிறார் அதன் ஒரு பகுதியாக தொடர்மலை ஏற்பட்டுள்ள வால்பாறை பகுதியில் ஆய்வு மேற்கொள்ள அறிவுறுத்தியுள்ளார்.

party officials,inspection,officers,mayor,residences ,கட்சி நிர்வாகிகள், ஆய்வு, அதிகாரிகள், நகரமன்ற தலைவர், குடியிருப்புகள்

மேலும் அரசு வசம் உள்ள அடுக்குமாடி குடியிருப்புகள் 138 இதில் 40 ஆண்டுகளுக்கு மேலாக பழுது அடைந்த உள்ள நிலையில் உள்ள 60 கட்டிடங்கள் கண்டறியப்பட்டு புதிதாக கட்ட நடவடிக்கை மேற்கொண்டு வருவதாகவும்.

மேலும் பொள்ளாச்சி, வீடு மற்றும் நகர்புற வளர்ச்சி துறை திட்டத்தால் கட்டப்பட்டு இருக்கும் புதிய அடுக்குமாடி குடியிருப்புகள் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு விரைவில் தர மாவட்ட ஆட்சித் தலைவரிடம் ஆலோசனை மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவித்தார்.

இதில் கோவை தெற்கு மாவட்ட செயலாளர் தளபதி முருகேசன், நகர செயலாளர் நவநீதகிருஷ்ணன் நகர மன்ற தலைவர் சியாமளா உட்பட கட்சி நிர்வாகிகள்,அரசு அதிகாரிகள் உடன் இருந்தனர்.

Tags :
|