Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • ஆவின் பொருட்களின் விலையை ஏற்றி விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் ... அமைச்சர் நாசர்

ஆவின் பொருட்களின் விலையை ஏற்றி விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் ... அமைச்சர் நாசர்

By: vaithegi Sun, 27 Nov 2022 3:28:50 PM

ஆவின் பொருட்களின் விலையை ஏற்றி விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்   ...   அமைச்சர் நாசர்

சென்னை: பால்வளத்துறை அமைச்சர் நாசர், சென்னை அடையாறில் உள்ள ஆவின் பால் பூத்தில் ஆய்வு மேற்கொண்டார். இதனை அடுத்து அப்போது செய்தியாளரை சந்தித்த அவர், “மக்களின் அடிப்படை தேவைகளை நிறைவு செய்கின்ற பொருட்களில் பாலும் ஒன்று, அது காலம் தாழ்ந்து வருகிறதா? விற்கப்படும் பொருட்கள் சரியான முறையில் விற்பனை செய்யப்படுகிறதா? அந்தப் பால் சரியான முறையில் மக்களுக்கு விநியோகம் செய்யப்படுகிறதா? என்று ஆய்வு செய்யப்பட்டு வருவதாக அமைச்சர் அவர்கள் கூறினார்.

இதையடுத்து ஒவ்வொரு மாவட்டத்திற்கும் உள்ள பகுதிகளுக்கு சென்று ஆய்வு மேற்கொண்டு வருகிறோம். அந்த அடிப்படையில் இன்று அடையார் பகுதியில் உள்ள ஆவின் பூத்தில் ஆய்வு செய்தோம். வணிக பால் விலை ஏற்றத்திற்குப் பிறகு, பொதுமக்கள் சாதாரணமாக வாங்கும் பால் விலை எப்போதும் போல் அதே விலையில் தான் உள்ளது.

minister nasser,avin ,அமைச்சர் நாசர்,ஆவின்

அதில் எந்த வித மாற்றமும் இல்லை. வணிக ரீதியாக உள்ள பால் மட்டும் தான் விலை அதிகரித்துள்ளது. ஆரஞ்சு நிற பால் பாக்கெட் கடந்த காலத்தில் ரூ. 48ஆக இருந்தது. அட்டைதாரருக்கு ரூ.46 ஆக இருந்தது. இப்போது அது ரூ.60 ஆக உயர்ந்துள்ளது.

இருந்தாலும் இது வணிக ரீதியாக மட்டும் தான். அட்டை வைத்திருப்பவர்களுக்கு இன்றும் ரூ.46 ஆக தான் அளித்து கொண்டு வருகிறோம். மற்ற மாநிலங்களில் உள்ள அனைத்து பால் கம்பெனிகளை விட ஆவின் தான் விலை குறைவு. இது பொது சேவை நோக்கத்தோடு தான் இது செயல்படுகிறது என அவர் கூறினார்.

Tags :