Advertisement

மிக கேவலமான முறையில் விளம்பரம் தேடும் பாஜக அண்ணாமலை

By: Nagaraj Tue, 07 June 2022 10:54:22 PM

மிக கேவலமான முறையில் விளம்பரம் தேடும் பாஜக அண்ணாமலை

சென்னை: முன்னிலைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதற்காக மிகவும் கேவலமான முறையில் பாஜக அண்ணாமலை விளம்பரம் தேடிக்கொள்கிறார் என அமைச்சர் நாசர் குற்றம்சாட்டியுள்ளார்.

இதுகுறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது: அமைச்சர்கள் எல்லாம் தனது குற்றச்சாட்டுகளுக்கு பதில் அளிப்பார்கள், அதை வைத்து விளம்பரம் தேடலாம் என்பதே அண்ணாமலையின் எண்ணம். ஆவினில் இன்னும் தயாரிக்கப்படாத ஒரு பொருளை, ஏன் சுகாதாரத்துறை வாங்கவில்லை என அவர் கேள்வி எழுப்பியிருப்பது அவர் படித்த ஐ.பி.எஸ். படிப்புக்கு அழகல்ல.

தமிழக அரசு சார்பில் கர்ப்பிணி பெண்களுக்கு வழங்கப்படும் ஊட்டச்சத்து பவுடர் கொள்முதலில் முறைகேடுகள் நிகழ்ந்துள்ளதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குற்றஞ்சாட்டியுள்ள நிலையில், அதற்கு அமைச்சர்கள் மா.சுப்ரமணியன் மற்றும் நாசர் ஆகியோர் கூட்டாக விளக்கம் அளித்துள்ளனர்.

minister,accused,bjp annamalai,pregnant women ,அமைச்சர், குற்றச்சாட்டு, பாஜக அண்ணாமலை, கர்ப்பிணி பெண்கள்

அதில் அண்ணாமலை எப்படி ஐ.பி.எஸ். படித்தார் என தெரியவில்லை. என்றும், ஆவினில் தயாரிக்கப்படாத ஒரு பொருளை சுகாதாரத்துறை ஏன் வாங்கவில்லை என அண்ணாமலை கேள்வி எழுப்பியிருப்பது நகைப்புக்குரியது என தெரிவித்துள்ளனர்.

கர்ப்பிணி பெண்களுக்கு வழங்கப்பட்டு வரும் செறிவூட்டப்பட்ட ஊட்டச்சத்து பவுடருக்கும் ஆவினில் இனி மேல் தயாரிக்க இருக்கக் கூடிய ஊட்டச்சத்து பவுடருக்கும் நிறைய வித்தியாசம் உள்ளதாகவும் ஆவின் தயாரிப்பு ஊட்டச்சத்து பவுடரை பொறுத்தவரை இப்போது தான் முதல் நிலை ஆய்வில் இருப்பதாகவும் இன்னும் தயாரிப்பு பணிகளே தொடங்கவில்லை எனவும் அமைச்சர் நாசர் தெரிவித்தார். அப்படியிருக்கும் போது கர்ப்பிணி பெண்களுக்கு வழங்கப்படும் ஊட்டச்சத்து பவுடரை ஆவினில் ஏன் வாங்கவில்லை என அண்ணாமலை வினவியுள்ளதாக கூறினார்.

Tags :