Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • ரேஷன் கடைகளில் சிலிண்டர் விற்பனை செய்யும் திட்டம் விரைவில் கொண்டு வர உள்ளதாக கூட்டுறவுத்துறை அமைச்சர் தெரிவிப்பு

ரேஷன் கடைகளில் சிலிண்டர் விற்பனை செய்யும் திட்டம் விரைவில் கொண்டு வர உள்ளதாக கூட்டுறவுத்துறை அமைச்சர் தெரிவிப்பு

By: vaithegi Sun, 04 Sept 2022 5:05:13 PM

ரேஷன் கடைகளில் சிலிண்டர் விற்பனை செய்யும் திட்டம் விரைவில் கொண்டு வர உள்ளதாக கூட்டுறவுத்துறை அமைச்சர்  தெரிவிப்பு

சென்னை: ரேஷன் கடைகளில் புதிய திட்டம் குறித்த அறிவிப்பை தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி வெளியிட்டுள்ளார். இதை அடுத்து இவர் தெரிவித்துள்ளதாவது, தமிழகத்தில் ரேஷன் கடைகளில் விரைவில் டிஜிட்டல் முறையில் பணப்பரிவர்த்தனை (UPI) மூலமாகப் பணம் அனுப்பும் வசதி வர உள்ளதாக தெரிவித்துள்ளார்.

எனவே இதற்காக தமிழகத்தின் ஒவ்வொரு மாவட்டத்திலும் 10 நியாயவிலைக் கடைகளை தேர்வு செய்து, மாதிரி நியாயவிலைக் கடைகளாக மாற்றுவதற்காக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்று அவர் கூறியுள்ளார்.

minister of cooperatives,ration shop,sale of cylinders ,கூட்டுறவுத்துறை அமைச்சர்,ரேஷன் கடை, சிலிண்டர் விற்பனை

இதையடுத்து அதன்பின்பு தமிழகம் முழுவதும் இந்த திட்டம் விரிவு செய்யப்படும் என்றும் கூறியுள்ளார். இந்த திட்டம் ஒரு கிராம பஞ்சாயத்தில் குறைந்தபட்சம் 2 நியாயவிலைக் கடைகளில் செயல்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும் கிராமப்புறங்களிலும், மலைப் பிரதேசங்களிலும் அதிவேகமான இணைய சேவையை Wifi மூலமாக கொண்டு வர முதற்கட்டமாக ரேஷன் கடைகளில் Wifi அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளதாகவும் கூறியுள்ளார். இதை தொடர்ந்து ரேஷன் கடைகளில் சிலிண்டர் விற்பனை செய்யும் திட்டம் விரைவில் கொண்டு வர உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Tags :