Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • உயர்கல்வித்துறை அமைச்சர் மாணவர் சேர்க்கை பற்றிய முக்கிய தகவல் தெரிவிப்பு

உயர்கல்வித்துறை அமைச்சர் மாணவர் சேர்க்கை பற்றிய முக்கிய தகவல் தெரிவிப்பு

By: vaithegi Fri, 11 Nov 2022 6:25:27 PM

உயர்கல்வித்துறை அமைச்சர் மாணவர் சேர்க்கை பற்றிய முக்கிய தகவல் தெரிவிப்பு

சென்னை: தமிழகத்தில் 2021-2022ம் கல்வி ஆண்டில் 12ம் வகுப்பு முடித்த மாணவர்களுக்கு நடப்பு கல்வி ஆண்டில் கல்லூரி முதலாம் ஆண்டு சேர்க்கை நடத்தப்படுகிறது.

2 ஆண்டுகளுக்கு பிறகு நடப்பாண்டில் தான் மாணவர்களுக்கு பொதுத்தேர்வு மதிப்பெண்கள் வழங்கப்பட்டுள்ளது. அதற்கு முன்னதாக மாணவர்களுக்கு அகமதிப்பெண் அடிப்படையில் தான் கல்லூரி சேர்க்கை நடந்தது.

department of higher education,student admission ,உயர்கல்வித்துறை ,மாணவர் சேர்க்கை

இதனை அடுத்து 12ம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 20ம் தேதி அன்று முடிவுகள் வெளியான நிலையில், அப்போதில் இருந்து கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை தொடங்கப்பட்டது. இந்த நிலையில், சமீபத்தில் துணை தேர்வர்களுக்கான முடிவுகள் வெளியாகி உள்ளது.

அவர்களுக்கும் வாய்ப்பளிக்கும் வகையில், தமிழகத்தில் உள்ள அனைத்து கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளிலும் நவம்பர் 18ம் தேதி வரை மாணவர் சேர்க்கை நடைபெறும் என உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அவர்கள் தகவல் தெரிவித்துள்ளார்.

Tags :