Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • அரசுப் பள்ளிகளில் ஆசிரியர் காலிப்பணியிடங்கள் நிரப்புதல் எப்போது .. பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் விளக்கம்

அரசுப் பள்ளிகளில் ஆசிரியர் காலிப்பணியிடங்கள் நிரப்புதல் எப்போது .. பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் விளக்கம்

By: vaithegi Sat, 24 June 2023 3:38:55 PM

அரசுப் பள்ளிகளில் ஆசிரியர் காலிப்பணியிடங்கள் நிரப்புதல் எப்போது ..  பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் விளக்கம்

சென்னை: தமிழகத்தில் இந்த கல்வியாண்டில் அரசுப் பள்ளிகளில் சேர்ந்து உள்ள மாணவர்களின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது. ஆனால் ஒரு சில இடங்களில் இன்னும் ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படாமல் இருக்கிறது.

இதையடுத்து அந்த பணியிடங்கள் நிரப்புவது பற்றி பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி விளக்கம் ஒன்றை கொடுத்து உள்ளார். அதில், TRBக்கு கொடுக்கப்பட்ட காலண்டர் அடிப்படையில் வருடத்திற்கு 10 முதல் 11 ஆயிரம் பேர் எடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டு உள்ளது.

minister of school education,govt ,பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ,அரசுப் பள்ளி


மேலும் இப்பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிட்டு, 2 மாதங்களில் தேர்வு நடத்தப்பட்டு, சான்றிதழ் சரிபார்ப்பு முடிவதற்குள், யாராவது கேள்வி சரியில்லை, பதில் சரி இல்லை என்று வழக்கு தொடர்ந்துவிடுகின்றனர். அதனால் முடிவுகளில் வெளியிடப்படாத நிலை ஏற்படுகிறது.

அதனால் விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், அரசுப் பள்ளிகளில் காலி பணியிடங்கள் என எதுவும் இல்லை, தகுதி வாய்ந்த ஆசிரியர்களை வைத்து வகுப்பு நடத்தப்படுவதாக அவர் தெரிவித்து உள்ளார்.


Tags :