Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • பள்ளி மாணவர்களுக்கான காலாண்டு தேர்வு குறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கூறிய தகவல்

பள்ளி மாணவர்களுக்கான காலாண்டு தேர்வு குறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கூறிய தகவல்

By: Monisha Fri, 21 Aug 2020 1:56:01 PM

பள்ளி மாணவர்களுக்கான காலாண்டு தேர்வு குறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கூறிய தகவல்

கொரோனா நோய்த்தொற்று காரணமாக பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டு இருக்கின்றன. கோடை விடுமுறை கடந்தும், பள்ளிகளின் விடுமுறை நீண்டுகொண்டே செல்கிறது. கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் சிகிச்சை மையமாகவும், தனிமைப்படுத்தும் மையமாகவும் சில பள்ளிகள் மாற்றப்பட்டு உள்ளன.

இதற்கிடையே மாணவர்களின் கற்றலில் பாதிப்பு ஏற்படக்கூடாது என்பதற்காக ஆன்லைன் வகுப்புகள் தொடங்கப்பட்டு, பாடங்கள் நடத்தப்பட்டு வருகிறது. கல்வி தொலைக்காட்சி மூலமாகவும் பாடங்கள் கற்பிக்கப்படுகின்றன. பள்ளிகள் எப்போது திறக்கப்படும்? அதுகுறித்த அறிவிப்பு எப்போது வெளியாகும்? என பெற்றோரும், மாணவர்களும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

school,students,quarterly examination,educational minister ,பள்ளி,மாணவர்கள்,காலாண்டு தேர்வு,அமைச்சர் செங்கோட்டையன்

தொலைக்காட்சிகள் மூலம் தற்போது வகுப்பு நடைபெறும் சூழலில் காலாண்டு தேர்வு குறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் பதில் அளித்தார். அவர் கூறியதாவது:-

கொரோனா தாக்கம் குறைந்தபின், மாணவர்களுக்கு காலாண்டு தேர்வு நடத்துவது குறித்து முடிவு எடுக்கப்படும். அரசு பள்ளிகளில் மாணவர்களிடம் எதற்காக பணம் வசூலித்தாலும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். அரசு பள்ளிகளில் இதுவரை 50 ஆயிரம் மாணவர்கள் கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ளனர்.

10, 12 மட்டுமின்றி 8, 11ஆம் வகுப்பில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கும் மறுதேர்வு எழுத வாய்ப்பு தரப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Tags :
|