Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • சுவரொட்டிகளில் இருந்து நீக்கப்பட்ட அமைச்சர் பிடிஆரின் பெயர்

சுவரொட்டிகளில் இருந்து நீக்கப்பட்ட அமைச்சர் பிடிஆரின் பெயர்

By: Nagaraj Mon, 08 May 2023 11:34:16 PM

சுவரொட்டிகளில் இருந்து நீக்கப்பட்ட அமைச்சர் பிடிஆரின் பெயர்

மதுரை: சிம்மக்கல் பகுதியில் நடைபெற்ற பொதுக்கூட்டம் தொடர்பான சுவரொட்டிகளில் அமைச்சர் பிடிஆரின் பெயர் நீக்கப்பட்டு சிறப்புப் பேச்சாளராக ஏ.ஜெயரஞ்சன் பெயர் இடம்பெற்றது.

திமுகவின் 2 ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டங்கள் மாநிலம் முழுவதும் 1,222 இடங்களில் நடத்தப்பட்டுள்ளன. மதுரை சிம்மக்கல் பகுதியில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் சிறப்புப் பேச்சாளராக அந்த மாவட்டத்தைச் சேர்ந்த அமைச்சர் பி.டி.ஆர் பங்கேற்பார் என திமுகவின் அதிகாரபூர்வ இதழான முரசொலியில் கடந்த 3ம் தேதி அறிவிப்பு வெளியானது.

ஆனால் நேற்று மாலை சிம்மக்கல் பகுதியில் நடைபெற்ற பொதுக்கூட்டம் தொடர்பான சுவரொட்டிகளில் அமைச்சர் பிடிஆரின் பெயர் நீக்கப்பட்டு சிறப்புப் பேச்சாளராக ஏ.ஜெயரஞ்சன் பெயர் இடம்பெற்றுள்ளது. இந்நிலையில் நேற்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அமைச்சர் பி.டி.ஆர். பங்கேற்கவில்லை.

achievement,deletion,dmk,general-meeting,name,ptr, ,சாதனை, திமுக, நீக்கம், பிடிஆர், பெயர், பொதுக்கூட்டம்

முன்னதாக, உதயநிதி ஸ்டாலின் மற்றும் சபரீசனைப் பற்றி பழனிவேல் தியாகராஜன் மோசமான வார்த்தைகளில் பேசிய ஆடியோவை பாஜக தலைவர் அண்ணாமலை சில நாட்களுக்கு முன்பு வெளியிட்டார்.

இது பி.டி.ஆருக்கு நெருக்கடியை ஏற்படுத்தியது. ஆனால், அது தன்னுடைய ஆடியோ இல்லை என்று பி.டி.ஆர் விளக்கம் அளித்திருந்தார். இந்தநிலையில், சாதனை விளக்கப் பொதுக்கூட்டப் பட்டியலில் பழனிவேல் தியாகராஜன் பெயர் நீக்கப்பட்டது அரசியல் களத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளளது.

Tags :
|
|
|