Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • நீட் தேர்வில் தேர்ச்சி விகிதத்தை உயர்த்தும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும் ... அமைச்சர் பொன்முடி

நீட் தேர்வில் தேர்ச்சி விகிதத்தை உயர்த்தும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும் ... அமைச்சர் பொன்முடி

By: vaithegi Fri, 16 Sept 2022 4:01:00 PM

நீட் தேர்வில் தேர்ச்சி விகிதத்தை உயர்த்தும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும்   ...   அமைச்சர் பொன்முடி

சென்னை: உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி செய்தியாளர்கள் சந்திப்பில் கூறுகையில் வழக்கமாக டிசம்பரில் தொடங்கும் நீட் பயிற்சி இந்த ஆண்டு முன்கூட்டியே தொடங்கப்படும்.

இதனை அடுத்து அரசுப் பள்ளி மாணவர்களுக்கு நீட் பயிற்சி வகுப்புகளை அடுத்த மாதம் தொடங்கி வைக்கிறார் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின். நீட் தேர்வில் தேர்ச்சி விகிதத்தை உயர்த்தும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும்.

minister ponmudi,neet ,அமைச்சர் பொன்முடி ,நீட்

மேலும் மூன்றாம் மொழி பாடத்திட்டத்தில் கட்டாயம் ஆக்கக் கூடாது. தமிழ் ஆங்கிலம் இருமொழி முக்கியம். தேர்வு எழுதும் மொழியாக தமிழ் மற்றும் ஆங்கிலம் இருக்க வேண்டும். மாணவர்களை புத்தக பூச்சிகளாக மாற்றிவிட வேண்டாம்.

தொழில் பயிற்சியில் ஆர்வம் உடையவர்களாக மாற்ற வேண்டும். நீட் இருக்கும் வரை மாணவர்களை தயார் செய்து தான் ஆக வேண்டும். அதற்கான ஏற்பாடுகள் பல அரசு கல்வி நிறுவனங்களில் செய்யப்பட்டுள்ளது என அவர் கூறினார்.

Tags :