Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் இல்லாத தொகுதிகளில் புதிய கல்லூரிகள் ஆரம்பிக்கப்படும் .. அமைச்சர் பொன்முடி

அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் இல்லாத தொகுதிகளில் புதிய கல்லூரிகள் ஆரம்பிக்கப்படும் .. அமைச்சர் பொன்முடி

By: vaithegi Wed, 19 Oct 2022 2:17:26 PM

அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் இல்லாத தொகுதிகளில் புதிய கல்லூரிகள் ஆரம்பிக்கப்படும்  ..   அமைச்சர் பொன்முடி

சென்னை: கல்லூரிகள் இல்லாத தொகுதிகளில் புதிய கல்லூரிகள் ஆரம்பிக்கப்படும் ..... தமிழக அரசு பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு தரமான கல்வியை அளிக்க வேண்டும் என்ற நோக்கில் மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து கொண்டு வருகிறது. இந்த நிலையில் தமிழ்நாடு சட்டப்பேரவையின் 3வது நாள் கூட்டம் இன்று தொடங்கி உள்ளது.

இதையடுத்து அதில் ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்கிறார். அதாவது நேற்று முன்தினம் தொடங்கிய சட்டப்பேரவை கூட்டம் இன்றுடன் நிறைவு பெறுகிறது.

ponmudi,colleges ,பொன்முடி ,கல்லூரிகள்

அதைத்தொடர்ந்து இன்றைய சட்டப்பேரவை கூட்ட தொடரில் வரும் 2023-24 நடப்பு கல்வியாண்டாடுகளில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் இல்லாத தொகுதிகளில் புதிய கல்லூரிகள் ஆரம்பிக்கப்படும் என உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி சட்டப்பேரவை கூட்டத்தில் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து இந்த அறிவிப்பு கிராமப்புற மாணவர்கள் மற்றும் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. ஏனெனில் இன்றளவும் பல கிராமப்புற மாணவர்கள் தங்களின் உயர்கல்வியை தொடர முடியாமல் இருக்கின்றனர். இந்த அறிவிப்பு அவர்களுக்கு பெரும் மகிழ்ச்சியான செய்தியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Tags :