Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • ஆன்லைன் ரம்மி தடை மசோதா பரிசீலனையில் உள்ளதாகவும் விரைந்து நடவடிக்கை ஆளுநர் உறுதி ... அமைச்சர் ரகுபதி

ஆன்லைன் ரம்மி தடை மசோதா பரிசீலனையில் உள்ளதாகவும் விரைந்து நடவடிக்கை ஆளுநர் உறுதி ... அமைச்சர் ரகுபதி

By: vaithegi Thu, 01 Dec 2022 9:41:43 PM

ஆன்லைன் ரம்மி தடை மசோதா பரிசீலனையில் உள்ளதாகவும் விரைந்து நடவடிக்கை ஆளுநர் உறுதி   ...   அமைச்சர் ரகுபதி

சென்னை: ஆளுநர் உறுதி ... ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்வது தொடர்பாக தமிழக சட்டப்பேரவையில் கடந்த அக்டோபர் மாதம் 19-ந்தேதி சட்ட மசோதா தாக்கல் செய்யப்பட்டு நிறைவேறியது. இதை தொடர்ந்து ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்ட நிலையில், ஆனால் ஆளுநர் அந்த மசோதாவிற்கு ஒப்புதல் அளிக்கவில்லை.

இந்த மசோதா ஆளுநர் கவர்னர் சில விளக்கம் கேட்டிருந்தார். இதனையடுத்து ஆளுநர் அந்த விளக்கங்களை ஆய்வு செய்து கொண்டு வருகிறார். இந்நிலையில், தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, இன்று ஆளுநர் ஆர்.என்.ரவியை சென்னை ராஜ்பவனில் நேரில் சந்தித்தார்.

minister,online rummy ban,govt ,அமைச்சர் ,ஆன்லைன் ரம்மி தடை ,ஆளுநர்

இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ரகுபதி கூறியதாவது: ஆன்லைன் ரம்மி தடை மசோதா குறித்து ஆளுநருக்கு நேரில் விளக்கம் அளித்தோம். ஆளுநர் சில சந்தேகங்கள் கேட்டார். அதற்கு நாங்கள் பதிலளித்தோம். ஆன்லைன் ரம்மி தடை மசோதா பரிசீலனையில் உள்ளதாகவும் விரைந்து நடவடிக்கை எடுப்பதாகவும் ஆளுநர் உறுதி அளித்துள்ளார்.

மேலும் இதுவரை 21 மசோதாக்கள் நிலுவையில் இருக்கின்றன. குறிப்பிட்ட காலத்திற்குள் ஆளுநர் ஒப்புதல் அளிக்க வேண்டும் என எந்த கால நிர்ணயமும் கிடையாது. எனவே குறிப்பிட்ட காலத்தை நிர்ணயிக்கும்படி நாம் கேட்க முடியாது என அவர் கூறினார்.


Tags :