Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • காய்ச்சல் பரவல் கட்டுக்குள் இருப்பதாகவும், மக்கள் பதற்றம் அடைய வேண்டாம் .. அமைச்சர் மா. சுப்பிரமணியன்

காய்ச்சல் பரவல் கட்டுக்குள் இருப்பதாகவும், மக்கள் பதற்றம் அடைய வேண்டாம் .. அமைச்சர் மா. சுப்பிரமணியன்

By: vaithegi Thu, 16 Mar 2023 6:41:54 PM

காய்ச்சல் பரவல் கட்டுக்குள் இருப்பதாகவும், மக்கள் பதற்றம் அடைய வேண்டாம் ..  அமைச்சர் மா. சுப்பிரமணியன்

சென்னை: இந்தியாவில் உள்ள மாநிலங்களில் கொரோனாவிற்கு பின் தற்போது புதிய வகை ஒன்று காய்ச்சல் பாதிப்பு அதிகமாக பரவி கொண்டு வருகிறது. தமிழகத்திலும் இதனால் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இன்ஃப்ளூயன்ஸா H3N2 வகை வைரஸ் கொரோனாவை விட வேகமாக பரவக் கூடியது என்பதால், அதிகமாக மக்கள் பாதிக்கப்படுவதாக விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, பயங்கரமான சளி, இருமல், உடல்வலி, வாந்தி, மயக்கம் உள்ளிட்ட அறிகுறிகள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வைரஸ் பாதிப்பால் திருச்சியை சேர்ந்த ஒருவர் மட்டும் உயிரிழந்துள்ள நிலையில், மக்கள் பெரும் பதட்டத்தில் இருக்கின்றனர்.

minister ma. subramanian,fever ,அமைச்சர் மா. சுப்பிரமணியன்,காய்ச்சல்

இதையடுத்து இந்நிலையில் தமிழகத்தில் காய்ச்சல் பாதிப்பு குறித்து அமைச்சர் மா. சுப்பிரமணியன் விளக்கம் கொடுத்துள்ளார். அதில் மாநிலத்தில் காய்ச்சல் வீரியம் குறைவாக தான் இருக்கிறது .

அதனால் மக்கள் பதட்டம் அடைய தேவை இல்லை எனவும் தெரிவித்துள்ளார். மேலும் மாநிலம் முழுவதும் 6613 காய்ச்சல் முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளது எனவும், அதன் மூலம் 7 லட்சம் பேர் பயனடைந்து இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Tags :