Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • கோடைகாலங்களில் கூடுதல் மின்சாரம் தேவைப்படுவதால் அதனை சமாளிக்க புதிய திட்டம் அறிமுகம் .. அமைச்சர் செந்தில் பாலாஜி

கோடைகாலங்களில் கூடுதல் மின்சாரம் தேவைப்படுவதால் அதனை சமாளிக்க புதிய திட்டம் அறிமுகம் .. அமைச்சர் செந்தில் பாலாஜி

By: vaithegi Sat, 18 Mar 2023 11:12:02 AM

கோடைகாலங்களில் கூடுதல் மின்சாரம் தேவைப்படுவதால் அதனை சமாளிக்க புதிய திட்டம் அறிமுகம்  ..  அமைச்சர் செந்தில் பாலாஜி

சென்னை: தமிழகத்தில் தற்போது கோடைகாலம் துவங்கிவிட்டதால் மற்ற மாதங்களை காட்டிலும் மார்ச், ஏப்ரல், மே போன்ற மாதங்களில் அதிகளவிலான மின்சார தேவை இருக்கிறது. இதயத்து இது குறித்து மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

கடந்தாண்டு மார்ச் மாதத்தில் 17,196 மெகாவாட் மின்சாரம் தேவைப்பட்டதாகவும், இந்தாண்டு மார்ச் மாதத்தில் 18,053 மெகாவாட் ஆக உயர்ந்துள்ளதாக அறிவித்துள்ளார். மேலும், அடுத்த மாதத்தில் இன்னும் கூடுதலாக 18,500 வரைக்கும் மெகாவாட் மின்சாரம் தேவைப்படும் என்று அறிவித்துள்ளார்.

minister senthil balaji,power ,  அமைச்சர் செந்தில் பாலாஜி,மின்சாரம்

இதையடுத்து தமிழகத்தில் மின்சார தேவை எவ்வளவு அதிகரித்தாலும் அதை சமாளிக்கும் வகையில் மின்வாரியம் தயாராக இருப்பதாகவும் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். மேலும், தமிழகத்தில் கூடிய விரைவில் 3 கோடி ஸ்மார்ட் மீட்டர் பொருத்துவதற்கான ஒப்பந்தப்புள்ளி கோரப்படும் எனவும் அறிவித்துள்ளார்.

மேலும், தமிழகத்தில் 100 இடங்களில் மின் வாகனங்களுக்கு சார்ஜ் செய்து கொள்வதற்கான நிலையங்கள் உருவாக்கப்படும் எனவும், இதனை அடுத்து அதற்கான இறுதிக்கட்ட பணி நடைபெற்று வருவதாகவும், ஏப்ரல் மாத இறுதிக்குள் அமலுக்கு வரும் எனவும் அவர் அறிவித்துள்ளார்.

Tags :