Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • அக்டோபர் மாதம் முதல் உயர்த்தப்பட்ட மின்கட்டணம் அமல்படுத்த திட்டமிடப்பட்டு வருகிறது ... அமைச்சர் செந்தில் பாலாஜி

அக்டோபர் மாதம் முதல் உயர்த்தப்பட்ட மின்கட்டணம் அமல்படுத்த திட்டமிடப்பட்டு வருகிறது ... அமைச்சர் செந்தில் பாலாஜி

By: vaithegi Thu, 08 Sept 2022 7:05:03 PM

அக்டோபர் மாதம் முதல் உயர்த்தப்பட்ட மின்கட்டணம் அமல்படுத்த திட்டமிடப்பட்டு வருகிறது  ...  அமைச்சர் செந்தில் பாலாஜி


சென்னை: தற்போது மின் வாரியத்தை டிஜிட்டல் மையமாகும் நோக்கில் ஸ்மார்ட் மின் மீட்டர் பொருத்தும் பணிகள் நடைபெற்று கொண்டு வருகிறது. இந்நிலையில் மின் கட்டணத்தை உயர்த்த போவதாக தகவல் வெளியானது.அதாவது கடந்த 10 ஆண்டுகளில் தமிழக மின்சார துறையில் கடன் ரூ.12,647 கோடியாக அதிகரித்துள்ளது. இதை சமாளிக்க தமிழகத்தின் மின் கட்டணங்களில் மாற்றம் கொண்டு வர வேண்டும் என மத்திய அரசு பரிந்துரை செய்தது.

மேலும் இது பற்றி மத்திய அரசு தமிழக அரசுக்கு பல முறை கடிதம் எழுதியது. இதனையடுத்து தமிழக மின் வாரியம் மின் கட்டணத்தை உயர்த்துவது குறித்து ஆலோசனையில் ஈடுபட்டது. இந்த மின் கட்டணத்தை உயர்த்த மின் வாரியமானது ஒழுங்குமுறை ஆணையத்திடம் ஒப்புதல் கோரியது.

minister senthil balaji,electricity bill ,அமைச்சர் செந்தில் பாலாஜி,மின்கட்டணம்

இதை அடுத்து இந்நிலையில் மின் கட்டண உயர்வுக்கு, ஒழுங்குமுறை ஆணையத்தின் ஒப்புதல் விரைவில் கிடைக்கவுள்ளதாக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். மேலும் வரும் அக்டோபர் மாதம் முதல் உயர்த்தப்பட்ட மின்கட்டணம் அமல்படுத்த திட்டமிடப்பட்டு வருவதாகவும் கூறியுள்ளார்.

மேலும் அதனை தொடர்ந்து மின்சார வாகனங்களுக்கு சார்ஜ் செய்யும், ‘சார்ஜிங் பாயிண்ட்’ முன்னதாக 100 இடங்களில் அமைக்கப்பட உள்ளது. அத்துடன் 50,000 இலவச விவசாய மின் இணைப்பு வழங்கும் திட்டம் விரைவில் தொடங்கப்படும் என தெரிவித்துள்ளார்.

Tags :