Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • கோடைக்காலத்தில் மின்தட்டுப்பாடு ஏற்படாமல் இருக்க முன்ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது .. அமைச்சர் செந்தில் பாலாஜி

கோடைக்காலத்தில் மின்தட்டுப்பாடு ஏற்படாமல் இருக்க முன்ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது .. அமைச்சர் செந்தில் பாலாஜி

By: vaithegi Sun, 16 Apr 2023 11:53:24 AM

கோடைக்காலத்தில்  மின்தட்டுப்பாடு ஏற்படாமல் இருக்க முன்ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது   .. அமைச்சர் செந்தில் பாலாஜி

சென்னை: கரூர் மாநகரில் அமைந்துள்ள பெரிய பள்ளிவாசலில் நடைபெற்ற இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதில் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். இதையடுத்து அப்போது உரையாற்றிய அவர், “சென்னை, கோவை, மதுரைக்கு அடுத்தபடியாக விரைவில் கரூர் மாநகராட்சி முழுவதும் மின்கம்பங்களின் மேலே செல்லக்கூடிய மின் கம்பிகள் அனைத்தும், புதைவட மின் கம்பிகளாக அமைக்கப்படும். தமிழகத்தில் 4வது மாநகராட்சியாக, கரூர் மாநகராட்சியில் 465 கி.மீ சுற்றளவுக்கு புதைவட மின்கம்பிகள் அமைக்கப்பட உள்ளன.” என்றார்.

இதற்கு முன்னதாக, கரூரில் பல இடங்களில் ரூ.10 கோடி மதிப்பீட்டில் சாலை, சமுதாய கூடம், மயான கொட்டகை உள்ளிட்ட பணிகளை அமைச்சர் செந்தில் பாலாஜி தொடங்கி வைத்தார். அதை த்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், “ தமிழகத்தில் கோடை சீசனில் மின்தட்டுப்பாட்டை தவிர்க்க 3 மாத காலத்துக்கு தேவையான மின்சாரத்தை டெண்டர் மூலம் கோரப்பட்டுள்ளது. டெண்டர் மூலம் மின்சாரம் கொள்முதல் செய்யப்படுவதால் தமிழக அரசுக்கு 1,312 கோடி ரூபாய் லாபம் கிடைத்துள்ளது என்றார்.

minister senthil balaji,power outage ,அமைச்சர் செந்தில் பாலாஜி ,மின்தட்டுப்பாடு

2 மாத காலத்துக்கு முன்னர் 40 கோடி யூனிட் மின்சாரத்தை மக்கள் பயன்படுத்தியுள்ளனர். எவ்வித தடையும் இல்லாமல் சீராக வழங்கப்பட்டது. கோடைகால தேவையை கணக்கிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடந்த டிசம்பரிலேயே ஒரு யூனிட்டுக்கு ரூ.8.50 மூலம் டெண்டர் விடப்பட்டுள்ளது.

மேலும் டெண்டர் இல்லாமல் எக்ஸ்சேன்ஜில் மின்சாரம் வாங்கியிருந்தால் 12 ரூபாய்க்கு வாங்கும் நிலை ஏற்பட்டிருக்கும். கோடை காலத்தில் ஒரு நொடிப்பொழுது கூட மின்தட்டுப்பாடு இல்லாமல் மின்சாரம் வழங்க அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. கூடுதல் மின்சாரம் தேவைப்பட்டாலும் மின்வாரியம் சமாளிக்க தயாராகவுள்ளது” என அவர் தெரிவித்தார்.

Tags :