Advertisement

இபிஎஸ்-க்கு ... அமைச்சர் செந்தில் பாலாஜி பதில்

By: vaithegi Thu, 09 Mar 2023 6:06:37 PM

இபிஎஸ்-க்கு ...  அமைச்சர் செந்தில் பாலாஜி பதில்

சென்னை: சென்னையில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியதாவது, மின் தேவையை பூர்த்தி செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதையடுத்து திமுக ஆட்சியில் 18 மணி நேரத்துக்கு மும்முனை மின்சாரம் வழங்கப்படுகிறது. கோடை காலங்களில் சீரான மின் விநியோகம் வழங்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன. இதனால், தமிழ்நாட்டில் கோடை காலத்தில் தடையில்லா மின்சாரம் இருக்கும் எனவும் மின் தட்டுப்பாடு இருக்காது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் வீட்டில் உள்ள ஒன்றுக்கு மேற்பட்ட மின் இணைப்புகளை ஒரே மின் இணைப்பாக மாற்ற கூறவில்லை என கூறியுள்ளார்.

senthil balaji,electricity ,செந்தில் பாலாஜி,மின்சாரம்


வீடு ஒன்றுக்கு எத்தனை மின் இணைப்புகள் பெற்றிருந்தாலும் இலவச 100 யூனிட் மின்சாரம் என்பது தொடரும். விவசாயிகளுக்கு மும்முனை மின்சாரம் தொடர்ந்து வழங்கப்பட்டு கொண்டு வருகிறது. காலை 6-8, மாலை 6-10 இரு வேளைகளில் இருமுனை மின்சாரம் வழங்கப்படும் என்று விளக்கமளித்தார்.

அனல் மின் நிலையத்தில் மின் உற்பத்தி உயர்த்தப்பட்டுள்ளது. மின்கட்டமைப்பை வலுப்படுத்தி வருகிறோம். அதிமுக ஆட்சியில் டெல்டாவில் 12 மணி நேரம், மற்ற மாவட்டங்களில் 9 மணிநேர மும்முனை மின்சாரம் தரப்பட்டது. 24 மணி நேரமும் தடையில்லா மின்சாரம் விவசாயிகளுக்கு தரகோரிய அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு செந்தில் பாலாஜி பதிலளித்தார்.


Tags :