Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • அரசு மக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் பருவமழையை எதிர்கொள்ளும் .. அமைச்சர் சேகர்பாபு

அரசு மக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் பருவமழையை எதிர்கொள்ளும் .. அமைச்சர் சேகர்பாபு

By: vaithegi Mon, 07 Nov 2022 3:51:23 PM

அரசு மக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் பருவமழையை எதிர்கொள்ளும் ..   அமைச்சர் சேகர்பாபு

சென்னை:மக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் பருவமழையை எதிர்கொள்ளும் ... இந்த ஆண்டு பருவமழையை எதிர்கொள்ள அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பல எடுத்து கொண்டு இருக்கிறது. அந்த வகையில் மழைநீர் வடிகால் பணிகள் சரியாக நடைபெற்றதால் பல இடங்களில் மழைநீர் தேங்கவில்லை. மேலும் மக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்படாமல் இருக்கிறது.

இதனை அடுத்து இது குறித்து அமைச்சர் சேகர்பாபு கூறுகையில், இனி வரும் காலத்தில் சென்னையில் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்காத வண்ணம் கூடுதலாக நிதி ஒதுக்கப்படும் என தெரிவித்தார். மேலும் மக்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாத வகையில் பருவமழையை எதிர்கொள்ள தயாராக உள்ளோம் என அமைச்சர் தெரிவித்துள்ளார். தொடர்ந்து பேசிய அவர் டிசம்பர் அல்லது ஜனவரியில் ஸ்டீபன்சன் சாலை பாலம் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என தெரிவித்துள்ளார்.

shekhar babu,government,monsoon ,சேகர்பாபு,அரசு ,பருவமழை

இதையடுத்து இந்த ஆண்டு 75 கோடி ரூபாய் செலவில் மழைநீர் வடிகால், கால்வாய்கள் தூர்வாரப்பட்டுள்ளது எனவும், மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகளின் முதல் கட்டத்தில் 95% பணிகள் நிறைவடைந்துள்ளன எனவும் அடுத்த கட்ட பணிகளும் விரைவாக முடிக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் வருகிற நவம்பர் 9 ஆம் தேதி முதல் தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் மேலும் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags :