Advertisement

குமரி மாவட்டத்தில் அமைச்சர் சேகர் பாபு ஆய்வுப்பணி

By: Nagaraj Wed, 22 Feb 2023 9:59:56 PM

குமரி மாவட்டத்தில் அமைச்சர் சேகர் பாபு ஆய்வுப்பணி

நாகர்கோவில்: அமைச்சர் சேகர்பாபு குமரி மாவட்டம் சென்று மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில், வேளி மலை குமார கோவில் முருகன் கோவில்களுக்கு சென்று ஆய்வு செய்தார்.

தமிழக அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு குமரி மாவட்டம் சென்றார். மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில், வேளி மலை குமார கோவில் முருகன் கோவில்களுக்கு சென்று ஆய்வு செய்தார். பின்னர் நாகர்கோவிலில் அமைச்சர் சேகர்பாபு நிருபர்களிடம் கூறியதாவது:

தமிழகத்தில் ஆக்கிரமிப்பில் இருந்த இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான சொத்துகள் மீட்கப்பட்டு வருகின்றன. இதுவரை ரூ.4 ஆயிரம் கோடி மதிப்புள்ள சொத்துக்கள் மீட்கப்பட்டுள்ளன. இந்த மீட்பு வேட்டை தொடரும். மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில் திருவிழா நிகழ்ச்சி வரும் 5ம் தேதி நடக்கிறது. இன்னும் 15 நாட்கள் உள்ளன.

hindu religious,charities department,mandaikkadu,bhagavathy amman,minister shekharbabu,nagercoil, ,அமைச்சர் சேகர்பாபு, அறநிலையத்துறை, சொத்துக்கள் மீட்பு, நாகர்கோவில்

தற்போது, அங்கு எழுந்துள்ள பிரச்னை குறித்து, இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள், சம்பந்தப்பட்ட சங்கத்தினரிடம் பேசி வருகின்றனர். அமைச்சர் என்ற முறையில் இந்த விவகாரம் சுமுகமாகத் தீர்க்கப்படும் என்று நம்புகிறேன். அரசாங்கத்தைப் பொறுத்த வரையில் பிரச்சினையை பெரிதாக்க விரும்பவில்லை.

இவ்விழாவில் ஜாதி, சமூக வேறுபாடின்றி அனைவரும் பங்கேற்க வேண்டும். தக்கலை வேளி மலை குமார கோயிலில் உள்ள முருகன் கோயில் திருப்பணிக்கு ரூ.1 கோடியே 8 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன.

மேலும் பணியை சீக்கிரம் முடிக்க உத்தரவிட்டுள்ளேன். அனைத்து பணிகளும் நிறைவடைந்ததையடுத்து, வரும் ஏப்ரல் 24ம் தேதி முதல் 26ம் தேதி வரை விழா நடக்கிறது. வேளிமலை குமார கோவிலில் ஏராளமான திருமணங்கள் நடைபெற்று வருகின்றன. திருமணத்திற்கு பயன்படுத்தும் சமையலறைகள், தங்கும் அறைகள் போன்றவை பாழடைந்துள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.

Tags :