Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • தமிழகத்தில் உள்ள கோவில்களில் விஐபி தரிசனம் படிப்படியாக ரத்து செய்யப்படும் ... அமைச்சர் சேகர் பாபு

தமிழகத்தில் உள்ள கோவில்களில் விஐபி தரிசனம் படிப்படியாக ரத்து செய்யப்படும் ... அமைச்சர் சேகர் பாபு

By: vaithegi Tue, 22 Nov 2022 6:48:26 PM

தமிழகத்தில் உள்ள கோவில்களில் விஐபி தரிசனம் படிப்படியாக ரத்து செய்யப்படும்      ...   அமைச்சர் சேகர் பாபு

சென்னை: விஐபி தரிசனம் படிப்படியாக ரத்து செய்யப்படும் .... தமிழகத்தில் மாதந்தோறும் இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் அலுவலகத்தில், இந்து சமய அறநிலையத்துறை மானிய கோரிக்கையில் அறிவிக்கப்பட்ட பணி முன்னேற்றம் மற்றும் இதர பணிகள் குறித்த சீராய்வுக் கூட்டம் நடைபெறும்.

இதனை அடுத்து இம்மாதத்திற்கான கூட்டத்தில் கலந்து கொண்ட அமைச்சர் சேகர் பாபு அவர்கள் கூறுகையில் தமிழகத்தில் உள்ள கோவில்களில் விஐபி தரிசனம் படிப்படியாக ரத்து செய்யப்படும். பெரிய கோவில்களில் வருமானத்தை பொறுத்து விஐபி கட்டண தரிசனத்தை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தகவல் தெரிவித்துள்ளார்.

shekhar babu,vip darshanam ,சேகர் பாபு , விஐபி தரிசனம்

மேலும் அவர் விஐபி தரிசனம் இந்த ஆட்சியில் உருவானது அல்ல. நாளடைவில் விஐபி தரிசனம் முடக்கப்படும். திருக்கோவிலில் அனைவரும் சமம். உயர்ந்தவர், தாழ்ந்தவர் என்ற நிலை மாற்றப்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

மேலும் பேசிய அவர் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் இதுவரை மட்டும் 87,000 மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளது. மீதமுள்ள 13,000 மரக்கன்றுகள் விரைவில் நடப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Tags :