Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • அமைச்சர் சிவசங்கர் மாநிலத்தில் புதிதாக வரவுள்ள பேருந்துகள் மற்றும் அவற்றின் வண்ணங்கள் குறித்து தகவல்

அமைச்சர் சிவசங்கர் மாநிலத்தில் புதிதாக வரவுள்ள பேருந்துகள் மற்றும் அவற்றின் வண்ணங்கள் குறித்து தகவல்

By: vaithegi Thu, 31 Aug 2023 4:12:20 PM

அமைச்சர் சிவசங்கர் மாநிலத்தில் புதிதாக வரவுள்ள பேருந்துகள் மற்றும் அவற்றின் வண்ணங்கள்  குறித்து தகவல்

சென்னை: தமிழகத்தில் இனி பல வண்ணங்களில் பேருந்துகள் .... தமிழக போக்குவரத்து துறையில் உள்ள பேருந்துகள் அனைத்தும் மிகவும் பழுதடைந்து உள்ளதாகவும், இதன் காரணமாக பயணிக்கும் மக்களுக்கு விபத்துக்கள் மற்றும் ஆபத்து ஏற்பட வாய்ப்புகள் உள்ளதாகவும் பொதுமக்கள் கருத்து தெரிவித்து உள்ளனர்.

எனவே இதன் அடிப்படையில் தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் மாநிலத்தில் புதிய பேருந்துகளை வாங்குவதற்கான டெண்டர்கள் விடப்பட்டு நல்ல நிலைமையில் உள்ள பேருந்துகள் அனைத்தும் சீரமைக்கப்பட்டு செயல்படுத்தப்படும் என உறுதி அளித்தார்.

colors,buses,minister sivashankar ,வண்ணங்கள்  ,பேருந்துகள் ,அமைச்சர் சிவசங்கர்

இதற்கு முன்னதாக தமிழக நகரப் பேருந்துகள் மஞ்சள் வண்ணங்களில் இயங்கும் எனவும் தகவல் தெரிவிக்கப்பட்டது. தற்போது 500 கோடி மதிப்பீட்டில் 1000 புதிய பேருந்துகள் கொள்முதல் செய்யப்பட்டு இப்பேருந்துகள் பயன்பாட்டுக்கு வரும் பொழுது புதிய வண்ணங்களில் வரவுள்ளதாக போக்குவரத்து கழக கலந்தாய்வு கூட்டத்தில் அமைச்சர் தெரிவித்து உள்ளார்.

இதனையடுத்து புதிய பேருந்துகளுக்கான வண்ணம் பற்றி முதல்வரின் ஒப்புதல் கிடைத்த பிறகு புதிய நிறம் அறிமுகப்படுத்தப்படும் எனவும் தெரிவித்து உள்ளார். இதனால் இனி தமிழகத்தில் பல வண்ணங்களில் பேருந்துகள் செயல்படும் என தெரிய வருகிறது.

Tags :
|
|