Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • பள்ளி சீருடைகளில் வரும் மாணவர்களை இலவச பயணம் செய்ய அனுமதிக்க வேண்டும் .. அமைச்சர் சிவசங்கர்

பள்ளி சீருடைகளில் வரும் மாணவர்களை இலவச பயணம் செய்ய அனுமதிக்க வேண்டும் .. அமைச்சர் சிவசங்கர்

By: vaithegi Wed, 31 May 2023 10:10:30 AM

பள்ளி சீருடைகளில் வரும் மாணவர்களை  இலவச பயணம் செய்ய அனுமதிக்க வேண்டும்  ..  அமைச்சர் சிவசங்கர்


சென்னை : சீருடையில் வரும் மாணவர்களை இலவசமாக பேருந்தில் பயணிக்க அனுமதிக்க வேண்டும் என்று போக்குவரத்துத்துறை உத்தரவு .... தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து வருகிற 7ம் தேதி அனைத்து பள்ளிகளும் திறக்கப்படும் என பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது.

பள்ளிகள் திறக்கப்படும் போது பாடபுத்தகங்கள் விநியோகிக்கப்படும் உள்ளிட்ட பல அறிவிப்புகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இச்சூழலில் அரசு பேருந்துகளில் மாணவர்கள் பயணம் செய்ய இலவச பஸ் பாஸ் அளிக்கப்பட்டு வருகிறது . வரும் ஜூன் 7-ம் தேதி பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில் மாணவர்கள் இலவசமாக பேருந்துகளில் பயணம் மேற்கொள்ள, பழைய பஸ் பாஸை பயன்படுத்திக் கொள்ளலாம் என்று போக்குவரத்துத்துறை அறிவித்துள்ளது.

travel,minister sivashankar,school uniform ,பயணம் ,அமைச்சர் சிவசங்கர்,பள்ளி சீருடை

இந்த நிலையில் போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர், பள்ளி சீருடைகளில் வரும் மாணவர்களை அரசு பேருந்துகளில் இலவச பயணம் செய்ய அனுமதிக்க வேண்டும் .கடந்த கல்வியாண்டில் வழங்கப்பட்ட கட்டணமில்லா பேருந்து பயண அட்டையை காண்பித்து மாணவர்கள் பயணம் செய்யலாம்.

மேலும் சீருடை அணிந்திருந்தாலோ அல்லது அடையாள அட்டைகளை வைத்திருக்கும் மாணவர்களை பேருந்தில் இருந்து இறக்கி விடப்பட்டால் கடுமையான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்து ஊழியர்களுக்கு அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Tags :
|