Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • பிறந்தநாள் அன்று பெற்றோரிடம் வாழ்த்து பெற்றார் அமைச்சர் உதயநிதி

பிறந்தநாள் அன்று பெற்றோரிடம் வாழ்த்து பெற்றார் அமைச்சர் உதயநிதி

By: vaithegi Mon, 27 Nov 2023 11:44:50 AM

பிறந்தநாள் அன்று பெற்றோரிடம் வாழ்த்து பெற்றார் அமைச்சர் உதயநிதி

சென்னை: திமுக இளைஞரணி செயலாளரும் அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் இன்று தனது 46-வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். திமுக இளைஞரணி செயலாளரான அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் 1977 ஆம் ஆண்டு நவம்பர் 27ஆம் தேதி பிறந்தவர் . சினிமாவில் ஆர்வம் காட்டி வந்த இவர் பின்னர் தனது கவனத்தை அரசியல் பக்கம் திருப்பினார். 2019 -ம் ஆண்டு நடந்த பெற்ற நாடாளுமன்ற தேர்தலில் 22 சட்டமன்ற தொகுதிகளின் இடைத்தேர்தலிலும் தீவிரமாக பிரச்சாரம் செய்து கட்சி தொண்டர்களிடையே தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டார்.

இதையடுத்து 2019 ஆம் ஆண்டு ஜூலை மாதம் ஏழாம் தேதி திமுக இளைஞரணி செயலாளராக நியமனம் செய்யப்பட்டார். 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் தமிழ்நாடு முழுவதும் தீவிரமாக பிரச்சாரம் மேற்கொண்டு திமுகவின் வெற்றிக்காக பாடுபட்டார். இதை தொடர்ந்து திருவல்லிக்கேணி சேப்பாக்கம் தொகுதியில் போட்டியிட்டு மாபெரும் வெற்றி பெற்று எம்எல்ஏவாக தேர்வு செய்யப்பட்டார்.

birthday of minister udayanidhi ,அமைச்சர் உதயநிதி ,பிறந்தநாள்


இதன் பின் 2022 ஆம் ஆண்டு டிசம்பர் 14ஆம் தேதி உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சர் பொறுப்பு வழங்கப்பட்டது. அவருக்கு இளைஞர் நலம் மற்றும் விளையாட்டு துறை அமைச்சராக பொறுப்பு அளிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து உலக சதுரங்க போட்டியை வெற்றிகரமாக சென்னையில் நடத்தி விளையாட்டு துறை அமைச்சர் என்ற பெயருக்கு மேலும் சிறப்பு சேர்த்தார். தொடர்ந்து கட்சியிலும், ஆட்சியிலும் அதிகாரம் படைத்தவராக மாறிவரும் உதயநிதி ஸ்டாலின் தொடர்ந்து கட்சியினரால் கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் சென்னைஆழ்வார்பேட்டையில் உள்ள முதல்வர் ஸ்டாலின் இல்லத்தில் முதல்வர் ஸ்டாலின் மற்றும் துர்கா ஸ்டாலினை சந்தித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து பெற்றார். இதையடுத்து இதுதொடர்பாக அவர் தனது சமூகவலைத்தள பக்கத்தில் குறிப்பிட்டுள்ளதாவது, எனது பிறந்த நாளை முன்னிட்டு, ஈன்றெடுத்த பெற்றோர் கழகத்தலைவர் - மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களிடமும் - அன்னையார் அவர்களிடமும் இன்று காலை வாழ்த்துகளைப் பெற்றேன். அயராது உழைக்கவும் - அன்பின் வழி நடக்கவும் எந்நாளும் வழிநடத்தும் தாய் - தந்தையரின் வாழ்த்தை பெற்ற மகிழ்வான தருணத்திலிருந்து இந்த நாளை தொடங்குவதில் மகிழ்ச்சி கொள்கிறேன் என்று அதில் அவர் குறிப்பிட்டு உள்ளா

Tags :