Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • பள்ளி மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்தும் வகையில் புதிய முறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று அறிமுகம்

பள்ளி மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்தும் வகையில் புதிய முறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று அறிமுகம்

By: vaithegi Fri, 06 Jan 2023 8:17:15 PM

பள்ளி மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்தும் வகையில் புதிய முறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று அறிமுகம்

சென்னை: தமிழக பள்ளிக்கல்வித்துறை அரசு பள்ளி மாணவர்களுக்கு தரமான கல்வியை அளிக்கும் பொருட்டு அடுத்து 2023 ஆம் கல்வியாண்டு எண்ணற்ற புதிய திட்டங்களை அறிமுகப்படுத்தியது.

அதை தொடர்ந்து அவர்களின் திறமைகளை வெளிக்கொணரும் வகையில் அவ்வப்போது கலை நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டு மாணவர்கள் கௌரவிக்கப்பட்டு வருகிறார்கள்.

udayanidhi stalin,school ,உதயநிதி ஸ்டாலின் ,பள்ளி

அந்த வகையில் கடந்த 2021 டிசம்பர் மாதம் மாவட்டம் மற்றும் மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றது. அதை தொடர்ந்து தற்போது பள்ளி மாணவர்களின் கற்றலை மேம்படுத்த ஜப்பான் நாட்டின் டிஜிட்டல் தொழில்நுட்ப சாதனங்கள் பயன்படுத்தப்படவுள்ளது.

இதையடுத்து இப்புதிய தொழில்நுட்ப சாதனத்தை தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி இன்று சென்னையில் துவக்கி வைத்தார்.தொழில்நுட்ப சாதனங்களை பயன்படுத்தி கற்கும் முறை இன்று முதல் செயல்பாட்டிற்கு வந்துள்ளது.

எனவே இதன் மூலம் இனி வரும் நாட்களில் ஆசிரியர்களின் கற்பித்தல் முறை, மாணவர்களின் கற்றல் முறை எளிதாகும் என கூறப்படுகிறது.

Tags :