Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • நீட் தேர்வை ஒழிக்க மக்கள் இயக்கமாக ஓரணியில் திரள்வோம் ..அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

நீட் தேர்வை ஒழிக்க மக்கள் இயக்கமாக ஓரணியில் திரள்வோம் ..அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

By: vaithegi Sat, 21 Oct 2023 09:56:24 AM

நீட் தேர்வை ஒழிக்க மக்கள் இயக்கமாக ஓரணியில் திரள்வோம் ..அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

சென்னை: உதயநிதி அழைப்பு .... அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும்" என்ற தமிழ்நாட்டு மக்கள் - மாணவர்கள் உணர்வை பிரதிபலிக்கும் வகையில், திமுக இளைஞரணி, மாணவர் அணி, மருத்துவ அணி சார்பிலான மாபெரும் கையெழுத்து இயக்கம் நாளை தொடங்க உள்ளது.

இதையடுத்து இந்த கையெழுத்து இயக்கத்தை சென்னை கலைவாணர் அரங்கில், மருத்துவ அணி - மாணவர் அணி நிர்வாகிகளுடன் நாம் தொடங்கி வைக்கவுள்ளோம்.

minister udayanidhi stalin,neet,dmk youth,student team,medical team ,அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ,நீட் ,திமுக இளைஞரணி, மாணவர் அணி, மருத்துவ அணி

நீட் ஒழிப்புக்கான இந்த முன்னெடுப்பு, கழக மாவட்டங்கள்தோறும் ஒரே நேரத்தில் தொடங்கவுள்ளது. இந்நிகழ்வுகளில், பொதுமக்கள் - பெற்றோர்கள் - மாணவர்கள் உட்பட அனைத்து தரப்பினரும் பங்கேற்று கையெழுத்து இடுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

தமிழ்நாட்டின் கல்வி உரிமையையும் - நம் மாணவர்களின் மருத்துவராகும் கனவையும் காப்பதற்காக இடப்படும் ஒவ்வொரு கையெழுத்தும் மாண்புமிகு குடியரசு தலைவர் அவர்களுக்கு அனுப்பி வைக்கப்படும். நீட் தேர்வை ஒழிக்க மக்கள் இயக்கமாக ஓரணியில் திரள்வோம் என அதில் குறிப்பிட்டு உள்ளார்.

Tags :
|