Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • சென்னைக்கும், அதன் மக்களுக்கும் சென்னை தின வாழ்த்துகள் ..அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

சென்னைக்கும், அதன் மக்களுக்கும் சென்னை தின வாழ்த்துகள் ..அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

By: vaithegi Tue, 22 Aug 2023 2:38:57 PM

சென்னைக்கும், அதன் மக்களுக்கும் சென்னை தின வாழ்த்துகள் ..அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

சென்னை: புயல் - மழை - வெள்ளம் என்று எத்தனை பேரிடர்களை சந்தித்தாலும், உடனே மீண்டு வந்து வந்தாரை வாழ வைக்கும் சென்னைக்கும், அதன் மக்களுக்கும் 384-வது சென்னை தின வாழ்த்துகள் ...

இதனை அடுத்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியுள்ளதாவது, ஆங்கிலேயர்கள் உருவாக்கிய #Madras-ஐ சென்னை என்று பெயர் மாற்றி அதன் கட்டமைப்பை செதுக்கியவர் முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்கள்.

minister udayanidhi stalin,chennai ,அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ,சென்னை

சிங்கார சென்னை, சிங்கார சென்னை 2.O திட்டங்களின் மூலமாக சர்வதேச நகரங்களுக்கு இணையாக சென்னையை உருவாக்கி வருகிறார் நம் மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள்.

மேலும் அடுத்தடுத்த பன்னாட்டு விளையாட்டுப் போட்டிகளை சென்னையில் நடத்தி, நம் மாநகரின் புகழை உலகெங்கும் கொண்டுசேர்க்கும் பணியை நாம் மேற்கொண்டு வருகிறோம். புயல் - மழை - வெள்ளம் என எத்தனை பேரிடர்களை சந்தித்தாலும், உடனே மீண்டு வந்து வந்தாரை வாழ வைக்கும் சென்னைக்கும் - அதன் மக்களுக்கும் 384-ஆவது #ChennaiDay வாழ்த்துகள் என அவர் கூறியுள்ளார்.


Tags :