Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • 11ம் வகுப்பு படிக்க விண்ணப்பித்த அமைச்சர்; அரசியலில் இதெல்லாம் சகஜமப்பா!!!

11ம் வகுப்பு படிக்க விண்ணப்பித்த அமைச்சர்; அரசியலில் இதெல்லாம் சகஜமப்பா!!!

By: Nagaraj Wed, 12 Aug 2020 09:35:58 AM

11ம் வகுப்பு படிக்க விண்ணப்பித்த அமைச்சர்; அரசியலில் இதெல்லாம் சகஜமப்பா!!!

இப்போதான் 11ம் வகுப்பே படிக்க போகிறாரா என்று பெரும் விமர்சனங்கள் எழுந்துள்ளன. இந்த விமர்சனம் ஜார்க்கண்ட் மாநில அமைச்சர் பற்றிதான்.

ஜார்க்கண்ட் மாநில மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஜகர்நாத் மஹ்தோ அரசு உதவிபெறும் பள்ளியில் 11-ம் வகுப்பில் சேர்ந்து பயில விண்ணப்பித்துள்ளார்.

review,minister,11th class,application,jharkhand ,விமர்சனம், அமைச்சர், 11ம் வகுப்பு, விண்ணப்பம், ஜார்க்கண்ட்

பொகாரோ மாவட்டத்தில் உள்ள தேவி மஹ்தோ உயர்நிலைப்பள்ளியில் அவர் படிப்பை தொடர திட்டமிட்டுள்ளார். தும்ரி பேரவைத் தொகுதி எம்எல்ஏவாக இருக்கும் ஜகர்நாத், அரசியல் அறிவியல் படிப்பைத் தேர்வு செய்து படிக்க இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

1995-ஆம் ஆண்டு பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற ஜகர்நாத், அதன் பிறகு பள்ளிப் படிப்பைத் தொடரவில்லை. இந்நிலையில் பத்தாம் வகுப்பு மட்டுமே படித்தவரை ஜார்க்கண்ட் மாநில மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சராக நியமித்திருப்பது குறித்து பல்வேறு விமர்சனங்கள் எழுந்தன.

Tags :
|