Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • தொழிற்சங்கங்களுடன் அமைச்சர்கள் இன்று பேச்சுவார்த்தை

தொழிற்சங்கங்களுடன் அமைச்சர்கள் இன்று பேச்சுவார்த்தை

By: vaithegi Mon, 24 Apr 2023 10:30:21 AM

தொழிற்சங்கங்களுடன் அமைச்சர்கள் இன்று பேச்சுவார்த்தை

சென்னை: 12 மணிநேர வேலை செய்யம் வகையில் திருத்தப்பட்ட தொழிற்சாலைகள் திருத்த சட்ட மசோதா குறித்து தொழிற்சங்க நிர்வாகிகளுடன் இன்று ஆலோசனை .... தொழிலாளர்களுக்கு 8 மணி நேர வேலை என்ற சட்டம் அமலி இருந்து வரும் நிலையில், வேலை நேரத்தை 12 மணி நேரமாக அதிகரித்தும் சட்ட மசோதா தமிழக சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதாவை தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வி.கணேசன் தாக்கல் செய்தார்.

இதனை அடுத்து இந்த மசோதாவுக்கு தி.மு.க. கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், ம.தி.மு.க., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு, விடுதலை சிறுத்தைகள், தமிழக வாழ்வுரிமை கட்சி எம்.எல்.ஏ.க்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

negotiations,ministers ,பேச்சுவார்த்தை,அமைச்சர்கள்

மேலும் பா.ம.க., பா.ஜ.க.வும் தங்கள் தரப்பு எதிர்ப்பை பதிவு செய்தது. எனவே இதனை கண்டித்து முதல் முறையாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு, விடுதலை சிறுத்தைகள் கட்சிகள் வெளிநடப்பு செய்தன. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பையும் இந்த சம்பவம் பற்ற வைத்தது.

இதன் இடையே 12 மணி நேரமாக வேலை நேரத்தை உயர்த்தும் சட்ட மசோதா பற்றி விளக்கவும், தொழிற்சங்கத்தினர் கருத்துகளை அறியவும் அரசு சார்பில் ஆலோசனை கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இந்த கூட்டம் இன்றுமதியம் 3 மணிக்கு சென்னை, தலைமை செயலகத்தில் நடக்கிறது.

இதில் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், தொழிலாளர் நலன் மற்றும் திறன்மேம்பாட்டுத்துறை அமைச்சர் சி.வி.கணேசன் பங்கேற்கின்றனர்.இந்த பேச்சுவார்த்தையில் தொழிற்சாலை திருத்த சட்டம் பற்றி அமைச்சர்கள் விளக்கம் கொடுப்பார்கள் எனவும், தொழிற்சங்க நிர்வாகிகள் அவர்கள் தரப்பு கோரிக்கைகளை முன்வைப்பார்கள் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

Tags :