Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • தொழிற்சாலைகள் திருத்தச் சட்ட மசோதா ... தொழிற்சங்கங்களுடன் அமைச்சர்கள் நாளை ஆலோசனை

தொழிற்சாலைகள் திருத்தச் சட்ட மசோதா ... தொழிற்சங்கங்களுடன் அமைச்சர்கள் நாளை ஆலோசனை

By: vaithegi Sun, 23 Apr 2023 10:07:15 AM

தொழிற்சாலைகள் திருத்தச் சட்ட மசோதா ...  தொழிற்சங்கங்களுடன்  அமைச்சர்கள் நாளை ஆலோசனை

சென்னை: தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:- “கடந்த வெள்ளிக்கிழமை (21–4-2023) அன்று தமிழ்நாடு சட்டமன்றத்தில் "2023-ம் ஆண்டு தொழிற்சாலைகள் (தமிழ்நாடு திருத்தச்) சட்டமுன்வடிவு தாக்கல் செய்யப்பட்டது.

இதையடுத்து இச்சட்டமுன்வடிவினுடைய முக்கிய அம்சங்கள் குறித்தும், ஒன்றிய அரசின் தொழிலாளர் நல சட்டத்திலிருந்த தற்போது தமிழ்நாடு அரசு முன்மொழிந்திருக்கும் இந்தச் சட்டம் எவ்வாறு வேறுபட்டுள்ளது என்பதை விளக்கிக் கூறி, இந்தத் திருத்தத்தால் தமிழ்நாட்டிற்குக் கூடுதலாக வரக்கூடிய முதலீடுகள் மற்றும் பெருகும் வேலைவாய்ப்புகள் குறித்தும், சட்டமன்றத்தில் மாண்புமிகு தொழிலாளர் நலன் மற்றும் திறன்மேம்பாட்டுத்துறை அமைச்சர் அவர்களும், மாண்புமிகு தொழில் துறை அமைச்சர் அவர்களும் விரிவாக விளக்கம் அளித்தார்கள்.

ministers,factories amendment bill ,அமைச்சர்கள் ,தொழிற்சாலைகள் திருத்தச் சட்ட மசோதா

எனினும், சில இந்த மசோதா பற்றி தொழிலாளர் சங்கங்கள் கருத்துக்களைத் தெரிவித்து வருவதால் வருகிற 24-4-2023 (திங்கள்கிழமை) அன்று மதியம் 3-00 மணிக்கு தலைமைச் செயலகத்தில் பொதுப்பணித் துறை அமைச்சர், குறு,சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் துறை அமைச்சர், தொழிலாளர் நலன் மற்றும் திறன்மேம்பாட்டுத்துறை அமைச்சர்,

அதனையடுத்து தலைமைச் செயலாளர், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் மற்றும் தொழிலாளர் நலத் துறை ஆணையர் ஆகியோர் முன்னிலையில் தமிழ்நாட்டிலுள்ள முக்கிய தொழிற்சங்கங்களுடன் நடத்தப்படவுள்ளது.” என அதில் குறிப்பிட்டப்பட்டுள்ளது.

Tags :