Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • ரஷ்யாவிடம் இருந்து 33 போர் விமானங்கள் வாங்க பாதுகாப்பு அமைச்சகம் ஒப்புதல்

ரஷ்யாவிடம் இருந்து 33 போர் விமானங்கள் வாங்க பாதுகாப்பு அமைச்சகம் ஒப்புதல்

By: Nagaraj Fri, 03 July 2020 10:47:26 AM

ரஷ்யாவிடம் இருந்து 33 போர் விமானங்கள் வாங்க பாதுகாப்பு அமைச்சகம் ஒப்புதல்

பாதுகாப்பு அமைச்சகம் ஒப்புதல்... ரஷ்யாவிடமிருந்து 33 போர் விமானங்களை வாங்கும் திட்டத்திற்கு பாதுகாப்பு அமைச்சகம் ஒப்புதல் வழங்கியுள்ளது.

சீனாவுடன் எல்லைத் தகராறு ஏற்பட்டுள்ள நிலையில், இந்திய-ரஷ்ய அரசுகளுக்கு இடையேயான ஒப்பந்தத்தின் மூலம், ரஷ்யாவிடமிருந்து 33 போர் விமானங்களை கொள்முதல் செய்ய இந்திய விமானப் படை திட்டமிட்டிருப்பதாக ஏற்கெனவே தகவல் வெளியானது.

அந்த வகையில் பன்னிரெண்டு Su-30MKI, இருபத்தி ஒன்று MiG-29 விமானங்கள் என 33 போர் விமானங்களை ரஷ்யாவிடமிருந்து வாங்கும் திட்டத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளதாக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

defense,ministry,russia,warship,approval ,பாதுகாப்பு, அமைச்சகம், ரஷ்யா, போர்விமானம், ஒப்புதல்

ஏற்கெனவே இந்திய விமானப் படை வசம் உள்ள 59 MiG-29 விமானங்களை நவீனப்படுத்தும் திட்டத்திற்கும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், MiG-29 போர் விமானங்கள், 4ஆம் தலைமுறை ஜெட் விமானங்களுக்கு நிகரான திறன்களை பெறும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. 33 போர் விமானங்களை வாங்குவது மற்றும் 59 MiG-29 விமானங்களை நவீனப்படுத்துவது 18 ஆயிரத்து 148 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டமாகும்.

இதேபோல, வானில் இருந்து பாய்ந்து சென்று வானில் உள்ள இலக்கை தாக்கி அழிக்கும், 248 அஸ்ட்ரா ஏவுகணைகளை விமானப் படை மற்றும் கடற்படை பயன்பாட்டிற்கு கொள்முதல் செய்யவும் பாதுகாப்பு அமைச்சகம் ஒப்புதல் வழங்கியுள்ளது.

மேலும் ஆயிரம் கிலோமீட்டர் தூரம் பாய்ந்து சென்று, நிலத்தில் உள்ள இலக்கை தாக்கி அழிக்கும் ஏவுகணையை பாதுகாப்பு ஆராய்ச்சி-மேம்பாட்டு நிறுவனமான டிஆர்டிஓ தயாரிக்கவும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பினாகா ராக்கெட் லாஞ்சர்களுக்கு வெடிமருந்து வாங்குவதகு, BMPகவச வாகனங்களே மேம்படுத்துவது என பல்வேறு வகையான ஆயுத தளவாடங்கள் வாங்கவும் மேம்படுத்தவும் மொத்தம் 38 ஆயிரத்து 900 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

இதில், 31 ஆயிரத்து 130 கோடி ரூபாய் மதிப்பிலான கொள்முதல் இந்திய தொழில்துறையிடமிருந்து செய்யப்படும் என பாதுகாப்புத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Tags :
|