Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • பஞ்சாப்புக்கு துணை ராணுவப்படையை அனுப்ப உள்துறை அமைச்சகம் உத்தரவு

பஞ்சாப்புக்கு துணை ராணுவப்படையை அனுப்ப உள்துறை அமைச்சகம் உத்தரவு

By: Nagaraj Sat, 04 Mar 2023 11:38:14 AM

பஞ்சாப்புக்கு துணை ராணுவப்படையை அனுப்ப உள்துறை அமைச்சகம் உத்தரவு

சண்டிகர்: கலவர தடுப்புப் படையுடன் கூடிய 18 கம்பெனி துணை ராணுவப்படையை(சி.ஆர்.பி.எப்.) பஞ்சாப்புக்கு அனுப்ப மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான், டெல்லி உள்துறை மந்திரி அமித்ஷாவை நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தினார். அப்போது, பஞ்சாப் மாநிலத்தின் சட்டம் ஒழுங்கை பாதுகாக்க மத்திய படையை அனுப்புமாறு கோரியதாக தகவல் வெளியாகியுள்ளது.

amritpal singh,discussions,incident,punjab , உத்தரவு, துணை ராணுவப்படை, பஞ்சாப், மத்திய உள்துறை

பஞ்சாப் மாநிலத்தில் கடந்த பிப்ரவரி 23-ந்தேதி, காலிஸ்தான் ஆதரவு மத போதகரான அம்ரித்பால் சிங்கின் ஆதரவாளர்கள், அஜ்னாலாவில் காவல்நிலையத்தை முற்றுகையிட்டு, சிறையில் உள்ள அம்ரித்பால் சிங்கின் ஆதரவாளரை விடுவிக்க முயன்றனர்.

இந்த சம்பவம் பஞ்சத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் கலவர தடுப்புப் படையுடன் கூடிய 18 கம்பெனி துணை ராணுவப்படையை(சி.ஆர்.பி.எப்.) பஞ்சாப்புக்கு அனுப்ப மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

மொத்தம் 2,430 துணை ராணுவப் படையினர் பஞ்சாபுக்குச் செல்வார்கள் என்றும் மாநிலத்தின் சட்டம் ஒழுங்கை பாதுகாக்கும் பணியில் அவர்கள் ஈடுபடுத்தப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :