Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • எனது கருத்துக்கு உண்மைக்கு புறம்பான விளக்கம் அளிப்பது தவறு

எனது கருத்துக்கு உண்மைக்கு புறம்பான விளக்கம் அளிப்பது தவறு

By: Nagaraj Wed, 18 Jan 2023 11:55:45 PM

எனது கருத்துக்கு உண்மைக்கு புறம்பான விளக்கம் அளிப்பது தவறு

சென்னை: உண்மைக்கு புறம்பானது... தமிழகத்தின் பெயரை மாற்றும் முன்மொழிவு’ என எனது கருத்துக்கு விளக்கம் அளிப்பது தவறானது, உண்மைக்கு புறம்பானது என ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டிற்கு பதிலாக தமிழகம் சரியாக இருக்கும் என கவர்னர் ஆர்.என்.ரவி கூறியிருந்தார். இதற்கு பல்வேறு அரசியல் கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.

இந்நிலையில், ஆர்.என்.ரவி சார்பில் 2023 ஜனவரி 4-ஆம் தேதி வெளியிடப்பட்ட அறிக்கையில், அண்மையில் நிறைவடைந்த “காசியுடன் தமிழ் மக்களின் பழமையான கலாசார தொடர்பை கொண்டாடும்’ ஒரு மாத காசி – தமிழ் சங்கமம் விழாவில் பங்கேற்ற தன்னார்வ தொண்டர்களைப் பாராட்டும் நிகழ்ச்சி, ஆளுநர் மாளிகையில் நடைபெற்றது.

governor,politics,tamil nadu,tamilagam ,ஆளுநர், தமிழகம், தமிழ்நாடு, ஆர்.என். ரவி

அந்நிகழ்வில் வரலாற்றுப் பண்பாடு பற்றிப் பேசும் போது, காசி மற்றும் தமிழ்நாட்டுக்கும் இடையே உள்ள தொடர்பை குறிக்க, ‘தமிழகம்’ என்ற வார்த்தையைப் பயன்படுத்தினேன். அப்போது ‘தமிழ்நாடு’ இல்லை. எனவே, வரலாற்று, பண்பாட்டுச் சூழலில், ‘மிகப் பொருத்தமான வெளிப்பாடு’ என்ற கண்ணோட்டத்தில் ‘தமிழகம்’ என்று குறிப்பிட்டேன்.

எனது கருத்தை தமிழ்நாட்டின் பெயரை மாற்றுவதற்கான ஆலோசனையாக விளக்குவது அல்லது ஊகிப்பது தவறானது மற்றும் உண்மைக்கு புறம்பானது என்று தெரிவித்துக் கொள்கிறேன். தமிழ்நாட்டின் பெயரை மாற்றுவதற்கான பரிந்துரை எனும் வாதங்கள், விவாதப்பொருளாகி இருக்கிறது. அதற்கு முற்றுப்புள்ளி வைக்கவே இந்த விளக்கம் என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Tags :