Advertisement

காணமல் போன செல்போன் டவர்கள்.. நடந்தது என்ன..

By: Monisha Thu, 23 June 2022 6:53:07 PM

காணமல் போன செல்போன் டவர்கள்.. நடந்தது என்ன..

தமிழ்நாடு: தமிழநாட்டில் சில ஆண்டுகளாக காணமல் போன 600 செல்போன் டவர்கள். கடந்த 2017ஆண்டு முதல் கண்காணிப்பில் இல்லாத டவர்கள் காணமல் போயின. கரோனோ காலத்தை பயன்படுத்தி செல்போன் டவர்களை குறிவைத்து திருடிய நபர்கள் மர்மம் என்ன..

மொபைல் போன் டவர்களை அமைப்பதில் ஈடுப்பட்ட ஜிடிஎல் லிமிடெட் மும்பையை தலைமை இடமாக கொண்டது அதன் உடைய மண்டல் அலுவலகம் சென்னை புரசவாக்கத்தில் உள்ளது. இந்த நிறுவனம் இந்திய முழுவதும் 26,000 மொபைல் போன் டவர்கள் அமைத்து நிர்வகித்து வருவதாக கூறப்படுகிறது. தமிழகத்தில் மட்டும் 6,000 போன் டவர்கள் அமைக்கப்பட்டு பராமரித்து வருகின்றனர்.

அப்போது 2018 ஆம் ஆண்டில், குறிபிட்ட தனியார் டவர் சேவை நஷ்டத்தினால் இந்த சேவையை நிறுத்தியது. பல சேவை நிறுவனம் கரோனோ பாதிப்பால் கண்காணிக்க முடியாமல் போயின.

cell phone tower,missing,loss,signal problem ,மொபைல் டவர்,நஷ்டம், சேவை, திருட்டு,

சமீபத்தில், மற்ற நெட்வொர்க் என்ன ஆகிற்று பார்த்த பொது ஈரோட்டில் செல்போன் டவர் காணமல் போனது கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதை தொடர்ந்து தமிழகத்தில் முழுவதும் இயங்காத செல்போன் டவர்களின் நிலை குறித்து ஆராய்ந்தபோது 600 டவர்கள் காணாமல் போனது தெரிய வந்தது. செல்போன் டவர் தயரிக்க ரூ .25 லட்சம் முதல் 40லட்சம் வரை செலவாகிறது. இதனால் பல கோடி நஷ்டம் என்று அந்நிறுவனம் கூறுகிறது.
இது போன்று மதுரை மாவட்டம் கூடல் நகரிலும் ரூ.28 லட்சம் செலவில் அமைக்கப்பட்ட வோடபோன் செல்போன் டவர் இந்த ஆண்டு ஜனவரில் காணமல் போனது தெரிய வந்தது.இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags :
|