Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • ரஜினிக்கு தொலைபேசி வாயிலாக வாழ்த்து தெரிவித்த மு.க.அழகிரி

ரஜினிக்கு தொலைபேசி வாயிலாக வாழ்த்து தெரிவித்த மு.க.அழகிரி

By: Nagaraj Sun, 06 Dec 2020 08:52:27 AM

ரஜினிக்கு தொலைபேசி வாயிலாக வாழ்த்து தெரிவித்த மு.க.அழகிரி

திமுகவினர் கலக்கம்... கட்சி தொடங்க இருப்பதாக ரஜினிகாந்த் உறுதி செய்துள்ள நிலையில், அவருக்கு மு.க.அழகிரி தொலைபேசி மூலம் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது திமுக வட்டாரத்தில் கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.

ரஜினிகாந்த் அரசியல் கட்சி தொடங்கப் போவதை உறுதி செய்துள்ளார். வரும் 31ம் தேதி இது குறித்த அறிவிப்பு வெளியாகும் என தெரிவித்துள்ளார். இதனால் தமிழக அரசியல் களம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வரும் சட்டமன்ற தேர்தலில் ரஜினி தனித்து போட்டியிடுவாரா, அல்லது கூட்டணி அமைப்பாரா, அவர் முதல்வர் வேட்பாளரா அல்லது வேறு யாரேனும் இருக்கிறார்களா உள்ளிட்ட பல்வேறு கேள்விகள் எழுகின்றன.

rajini,mk alagiri,greetings,dmk circle ,ரஜினி, மு.க.அழகிரி, வாழ்த்து, திமுக வட்டாரம்

அதே போல் ரஜினி கட்சி தொடங்கினால் அதிமுக - பாஜக கூட்டணி தொடருமா, அல்லது பாஜக ரஜினி உடன் கூட்டணி அமைக்க முயற்சி செய்யுமா உள்ளிட்ட கேள்விகளும் எழுகின்றன.

இந்நிலையில் ரஜினியின் அறிவிப்பை தொடர்ந்து மு.க.அழகிரியின் மகன் துரை தயாநிதி அவருக்கு வரவேற்பு தெரிவித்துள்ளார். ரஜினி ஆட்சிக்கு வந்தால் தமிழகத்தில் மாற்றம் ஏற்படுவது உறுதி என கூறியுள்ளார்.

இந்நிலையில் மு.க.அழகிரி ரஜினியை தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. அதனால் மு.க.அழகிரி ரஜினி பக்கம் இணைய வாய்ப்பு இருப்பதாகவும் பேச்சு அடிபடுகிறது. இந்த தகவல் திமுக வட்டாரத்தில் கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.

Tags :
|