Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • குழப்பவாதிகளின் அறிவிப்புகள் அதிக பீதியூட்டுகின்றன; மு.க.ஸ்டாலின்

குழப்பவாதிகளின் அறிவிப்புகள் அதிக பீதியூட்டுகின்றன; மு.க.ஸ்டாலின்

By: Monisha Thu, 12 Nov 2020 12:39:13 PM

குழப்பவாதிகளின் அறிவிப்புகள் அதிக பீதியூட்டுகின்றன; மு.க.ஸ்டாலின்

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு ஒத்திவைப்பு என்ற அரசின் அறிவிப்பு குறித்து தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் விமர்சனம் செய்துள்ளார்.

கொரோனா பரவல் காரணமாக தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டன. அதன்பின்னர் இதுவரை திறக்கப்படவில்லை. இதனையடுத்து வருகிற 16-ந்தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் என்று அரசு அறிவித்தது. இதற்கு பெற்றோர் மற்றும் கல்வியாளர்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் தற்போது இந்த அறிவிப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

mk stalin,confusionists,panic,corona virus,schools ,மு.க.ஸ்டாலின்,குழப்பவாதிகள்,பீதி,கொரோனா வைரஸ்,பள்ளிகள்

இதுதொடர்பாக தி.மு.க.தலைவர் மு.க.ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

பள்ளிகள் திறப்பு - ஒத்திவைப்பு குழப்பங்கள் அரசின் ஊசலாட்ட மனநிலையைக் காட்டுகிறது. முன்யோசனைகள் இன்றி அறிவித்து பின்வாங்குவது தமிழக அரசின் வழக்கமாகிவிட்டது. கொரோனாவை விட இந்த குழப்பவாதிகளின் அறிவிப்புகளே அதிக பீதியூட்டுகின்றன.

Tags :
|