Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • பூர்வீக சொத்தில் சம பங்கினை பெண்கள் பெறலாம்; உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு மு.க.ஸ்டாலின் வரவேற்பு

பூர்வீக சொத்தில் சம பங்கினை பெண்கள் பெறலாம்; உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு மு.க.ஸ்டாலின் வரவேற்பு

By: Monisha Tue, 11 Aug 2020 3:49:52 PM

பூர்வீக சொத்தில் சம பங்கினை பெண்கள் பெறலாம்; உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு மு.க.ஸ்டாலின் வரவேற்பு

பூர்வீக சொத்தில் சம பங்கினை பெண்கள் பெறலாம் என்ற உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை வரவேற்கிறேன் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

உச்சநீதிமன்றத்தில் 2005 இந்து வாரிசு சட்டத்திருத்தம் தொடர்பான வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது "திருத்தப்பட்ட இந்து வாரிசு சட்டத்தின்படி மகனை போன்று மகளும் சொத்தின் சம பங்கை பெறும் உரிமை உள்ளது.

சட்டம் நடைமுறைக்கு வருவதற்கு முன்னதாக சொத்துதாரர் இறந்திருந்தாலும் பெண்ணுக்கு சம பங்கு பெறும் உரிமை உள்ளது" என்று கோர்ட் தெரிவித்துள்ளது.

native property,women,supreme court,judgment,mk stalin ,பூர்வீக சொத்து,பெண்கள்,உச்சநீதிமன்றம்,தீர்ப்பு,மு.க. ஸ்டாலின்

இந்நிலையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியிருப்பதாவது:- "பூர்வீக சொத்தில் சம பங்கினை பெண்கள் பெறலாம் என்ற உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை வரவேற்கிறேன்.

பெண்களுக்குச் சொத்தில் சமபங்கு உண்டென 1989ம் ஆண்டே சட்டம் கொண்டு வந்த முத்தமிழறிஞர் கலைஞர் - திமுகவுக்கு கிடைத்த வெற்றி இது!

உரிமை கொண்டவர்களாக பெண்ணினம் உயர அடித்தளம் அமைக்கும் தீர்ப்பு!" இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags :
|