Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • மு.க. ஸ்டாலின் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க 3 நாள் பயணமாக நாளை காலையில் தென் மாவட்டங்களுக்கு செல்கிறார்

மு.க. ஸ்டாலின் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க 3 நாள் பயணமாக நாளை காலையில் தென் மாவட்டங்களுக்கு செல்கிறார்

By: vaithegi Tue, 06 Sept 2022 10:27:22 PM

மு.க. ஸ்டாலின் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க 3 நாள் பயணமாக நாளை காலையில் தென் மாவட்டங்களுக்கு செல்கிறார்

சென்னை: முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் பல நிகழ்ச்சிகளில் பங்கேற்க 3 நாள் பயணமாக நாளை காலையில் தென் மாவட்டங்களுக்கு செல்ல உள்ளார். முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், சென்னையில் இருந்து நாளை காலை 9.15 மணிக்கு விமானம் மூலம் தூத்துக்குடி சென்று அங்கிருந்து கார் மூலம் கன்னியாகுமரி செல்ல உள்ளார்.

இதை அடுத்து கன்னியாகுமரியில் ராகுல் காந்தி பங்கேற்கும் பாதயாத்திரையை தொடங்கி வைத்த பிறகு அங்கிருந்து கார் மூலம் திருநெல்வேலிக்கு சென்று இரவு தங்குகிறார். 8-ந்தேதி காலையில் திருநெல்வேலி மாவட்டத்தில் நடைபெறும் அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்று பல நலத்திட்டங்களை வழங்க உள்ளார்.

southern districts,m.k. stalin ,தென் மாவட்டங்கள்,மு.க. ஸ்டாலின்

அதன் பின்னர் நிகழ்ச்சி முடிந்ததும் திருநெல்வேலியில் இருந்து மதுரைக்கு புறப்படுகிறார். மதுரை செல்லும் வழியில் விருதுநகரில் மதிய உணவு சாப்பிடுகிறார். பின் மதுரை வந்தடைகிறார். 9-ந்தேதி காலை வணிக வரி மற்றும் பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தியின் இல்லத் திருமண நிகழ்ச்சியை முதல்- அமைச்சர் மு.க. ஸ்டாலின் நடத்தி வைக்கிறார். அதைத் தொடர்ந்து வேலம்மாள் குழும இல்ல திருமண நிகழ்ச்சியிலும் கலந்து கொள்கிறார்.

மேலும்தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மதுரையில் அருங்காட்சியகப் பணிகளையும் தொடங்கி வைத்து, அங்கு கட்டப்பட்டு வரும் கலைஞர் நூலகத்தையும் பார்வையிடுகிறார். அதன்பின் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 9-ந்தேதி இரவு விமானம் மூலம் சென்னை திரும்புகிறார்.

Tags :