Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • சென்னை தலைமை செயலகத்தில் ஜனாதிபதி தேர்தலுக்கான தனது வாக்கினை மு.க.ஸ்டாலின் செலுத்தினார்

சென்னை தலைமை செயலகத்தில் ஜனாதிபதி தேர்தலுக்கான தனது வாக்கினை மு.க.ஸ்டாலின் செலுத்தினார்

By: vaithegi Mon, 18 July 2022 11:48:46 AM

சென்னை தலைமை செயலகத்தில்  ஜனாதிபதி தேர்தலுக்கான தனது வாக்கினை  மு.க.ஸ்டாலின் செலுத்தினார்

சென்னை: ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில் மு.க.ஸ்டாலின் இன்று (திங்கட்கிழமை) ஆஸ்பத்திரியில் இருந்து வீடு திரும்பினார் புதிய ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்காக நடத்தப்படும் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி (பா.ஜ.க கூட்டணி) வேட்பாளராக திரவுபதி முர்முவும், எதிர்க்கட்சி சார்பில் யஷ்வந்த் சின்காவும் வேட்பாளர்களாக களத்தில் உள்ளனர்.

இதனால் நாடு முழுவதும் உள்ள எம்.பி, எம்.எல்.ஏ.க்கள் வாக்குசீட்டு முறையில் புதிய ஜனாதிபதியை தேர்வு செய்ய உள்ளனர். எம்.எல்.ஏ.க்கள் ஓட்டு போடுவதற்காக அந்தந்த மாநிலங்களில் உள்ள தலைமை செயலகத்தில் வாக்குப்பதிவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

m.k.stalin,presidential election ,மு.க.ஸ்டாலின் ,ஜனாதிபதி தேர்தல்

மேலும் சென்னை தலைமைச் செயலகம் அந்த வகையில் தமிழகத்தில் உள்ள எம்.எல்.ஏ.க்கள் ஓட்டு போடுவதற்காக, சென்னை தலைமைச் செயலக வளாகத்தில் உள்ள சட்டசபை குழு கூட்ட அரங்கில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. தொடர்ந்து இன்று நடக்கும் வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் இருந்தன.

இந்த நிலையில் சென்னை தலைமை செயலகத்தில் உள்ள வாக்குப்பெட்டியில் ஜனாதிபதி தேர்தலுக்கான தனது வாக்கினை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் செலுத்தினார். அவரைத்தொடர்ந்து மாநில அமைச்சர்களும் வாக்களித்தனர்.

Tags :