Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • மு.க.ஸ்டாலின் இன்று சென்னை விமான நிலையத்தில் இருந்து மதுரைக்கு செல்கிறார்

மு.க.ஸ்டாலின் இன்று சென்னை விமான நிலையத்தில் இருந்து மதுரைக்கு செல்கிறார்

By: vaithegi Wed, 14 Sept 2022 10:13:01 AM

மு.க.ஸ்டாலின் இன்று  சென்னை விமான நிலையத்தில் இருந்து மதுரைக்கு  செல்கிறார்

சென்னை: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பல நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக மதுரை, திண்டுக்கல், விருதுநகர் மாவட்டங்களுக்கு செல்கிறார். எனவே இதற்காக, இன்று (புதன்கிழமை) காலை 11.35 மணியளவில் சென்னை விமான நிலையத்தில் இருந்து மதுரைக்கு புறப்பட்டு செல்கிறார்.

இதை அடுத்து மதுரையை சென்றடைந்த பிறகு, சிறிது நேரம் ஓய்வெடுக்கும் அவர், பின் அங்கிருந்து திண்டுக்கல்லுக்கு காரில் செல்கிறார். அங்கு ஓட்டல் அமிகாவில் தங்குகிறார். அங்கிருந்து மாலை 5 மணிக்கு புறப்பட்டு, திண்டுக்கல் தோட்டனூத்து என்ற இடத்தில் இலங்கை தமிழர்களுக்காக கட்டி முடிக்கப்பட்ட வீடுகளை பயனாளிகளுக்கு வழங்குகிறார்.

m.k.stalin,chennai airport,madurai ,மு.க.ஸ்டாலின், சென்னை விமான நிலையம்,மதுரை


பிறகு அங்கிருந்து, மாலை 5.45 மணிக்கு மதுரைக்கு புறப்படுகிறார். மதுரையில் அரசு விருந்தினர் இல்லத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தங்குகிறார். நாளை (வியாழக்கிழமை) காலை 7.15 மணிக்கு அங்கிருந்து புறப்பட்டு, அங்குள்ள அண்ணா சிலைக்கு அவர் மாலை அணிவிக்கிறார். காலை 7.25 மணிக்கு இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றுவிட்டு, 7.30 மணிக்கு நெல்பேட்டையில் உள்ள மைய சமையல் கூடத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வையிடுகிறார்.

இதனை அடுத்து அங்கு காலை உணவு எடுத்துச்செல்லும் வாகனங்களை கொடியசைத்து தொடங்கிவைக்கிறார். பின்னர், காலை 8 மணிக்கு ஆதிமூலம் மாநகராட்சி தொடக்கப்பள்ளியில் காலை சிற்றுண்டி வழங்கும் திட்டத்தை தொடங்கி வைக்கிறார்.

Tags :