Advertisement

எம்எல்ஏ அங்காளன் உண்ணாவிரதம் இருந்ததால் பரபரப்பு

By: Nagaraj Fri, 23 Sept 2022 9:29:46 PM

எம்எல்ஏ அங்காளன் உண்ணாவிரதம் இருந்ததால் பரபரப்பு

புதுச்சேரி: எம்எல்ஏ உண்ணாவிரதம்... புதுச்சேரி மாநிலம், திருபுவனை(தனி) தொகுதி சட்டப்பேரவை உறுப்பினராக அங்காளன் உள்ளார். ஏற்கனவே என்.ஆர்.இந்த நிலையில், பாஜக ஆதரவு எம்எல்ஏவான அங்காளன் புதுச்சேரி சட்டப்பேரவை வளாகம் வந்து, வாயிலில் அமர்ந்து உண்ணாவிரத போராட்டம்ட நடத்தினார்.

பாஜகவுக்கு ஆதரவளிக்கும் சுயேச்சை எம்எல்ஏ என்பதால், எனது தொகுதி புறக்கணிக்கப்படுகிறது. எனது தொகுதிக்கு அடிப்படை வசதிகள், எந்த வேலையும் செய்து தரக்கூடாது என்று, முதல்வர் ரங்கசாமி அதிகாரிகளுக்கு மறைமுகமாக உத்தரவிட்டுள்ளார்.

support,participated,protest,fast,bjp support,legislative assembly ,ஆதரவு, பங்கேற்றார், போராட்டம், உண்ணாவிரதம், பாஜ ஆதரவு, சட்டப்பேரவை

இதனைக் கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாக எம்எல்ஏ அங்காளன் தெரிவித்தார். தொடர்ந்து புதுச்சேரி சட்டப்பேரவை வாயிலில் தனது ஆதரவாளர்களுடன் அமர்ந்து உண்ணாவிரதத்தில் அவர் ஈடுபட்டார்.

இதேபோல் சட்டப்பேரவை எதிரே திரண்ட அவர்களது ஆதரவாளர்கள் சிலர், திருபுவனைத் தொகுதியை புறக்கணிக்க வேண்டாம், பாஜக ஆதரவு எம்எல்ஏவை புறக்கணிக்க வேண்டாம் என முதல்வர் ரங்கசாமியைக் கண்டித்து, பதாகைகள் ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

புதுச்சேரி பாஜக ஆதரவு எம்எல்ஏ அங்காளனின் போராட்டத்துக்கு ஆதரவாக, பாஜக எம்எல்ஏ கல்யாண சுந்தரமும் பங்கேற்றுள்ளார்.

Tags :
|