Advertisement

மிக தீவிர புயலாக மாறி இருக்கும் “மோக்கா”

By: vaithegi Fri, 12 May 2023 1:30:36 PM

மிக தீவிர புயலாக மாறி இருக்கும் “மோக்கா”

இந்தியா: இந்தியாவின் தென் கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதை ஒட்டிய வங்கக்கடல் பகுதிகளில் இருந்த மோக்கா புயல் மிக தீவிர புயலாக மாறி இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவிப்பு... இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மத்திய வங்கக்கடல் பகுதிகளில் இருந்த மோக்கா புயல் தீவிர புயல் மற்றும் மிக தீவிர புயலாக மாறி இருக்கிறது.

இதையடுத்து இந்த புயல் வடக்கு – வடகிழக்கு திசையில் நகர்ந்து வருகிற 14 -ம் தேதி வங்கதேசம் மற்றும் வடக்கு மியான்மர் இடையே கடற்கரையை கடக்கக்கூடும் என்றும் அதனால் காற்றின் வேகம் மணிக்கு 150 முதல் 160 கி.மீ வேகத்திலும், இடையிடையே 175 கி.மீ வேகத்திலும் வீசக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது

mocha,storm ,மோக்கா,புயல்

இந்த நிலையில் இந்த புயல் காரணமாக 9 துறைமுகங்களில் 2-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. தமிழகத்தில் சென்னை, கடலூர், நாகை, காட்டுப்பள்ளி, தூத்துக்குடி துறைமுகங்களில் 2-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டு இருக்கிறது.மேலும் அது மட்டுமில்லாமல் பாம்பன், எண்ணூர், புதுச்சேரி, காரைக்கால் துறைமுகங்களிலும் 2ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுயிருக்கிறது.

மேலும் இந்த புயல் காரணமாக சில மாவட்டங்களில் கனமழை பெய்யும் என எச்சரிக்கை விடப்பட்டுயிருக்கிறது. இதையடுத்து அது மட்டுமில்லாமல் தென்கிழக்கு வங்கக்கடலில் உருவான மோக்கா புயலின் வேகம் மணிக்கு 11 கி.மீ-ல் இருந்து 7 கி.மீ ஆக குறைந்துள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.

Tags :
|