Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • மோக்கா புயல் காரணமாக தமிழகத்தின் பல பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்பு

மோக்கா புயல் காரணமாக தமிழகத்தின் பல பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்பு

By: vaithegi Sun, 14 May 2023 10:18:41 AM

மோக்கா புயல் காரணமாக தமிழகத்தின் பல பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்பு


இந்தியா: வங்க கடலில் உருவாகும் மோக்கா புயல் இன்று கரையை கடக்க உள்ள நிலையில் அடுத்த 4 நாட்களுக்கு தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிப்பு ....

வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் “மோக்கா” என்ற புயலாக தீவிரமடைந்த நிலையில் வடக்கு – வடமேற்கு திசை நோக்கி தொடர்ந்து நகர்ந்து கொண்டு வருகிறது. தற்போது அந்தமான் தீவின் போர்ட் ப்ளேயரிலிருந்து 530 கி.மீ மேற்கு – வடமேற்கு திசையில் இந்த புயல் நகர்ந்து கொண்டு உள்ளது.

இந்த மோக்கா புயல் இன்று நண்பகல் நேரத்தில் வங்கதேசம் – மியான்மர் இடையே கரையை கடக்கும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

rain,mocha storm ,மழை ,மோக்கா புயல்

இதையடுத்து இந்த புயலின் காரணமாக காற்றில் ஈரப்பதம் குறைவதால் தமிழ்நாட்டின் பல பகுதிகளில் இன்று வெப்ப நிலை உயரும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

புயல் கரையை கடந்த பின் ஏற்படும் வளிமண்டல சுழற்சி மாற்றங்களால் அடுத்த 4 நாட்களுக்கு தமிழகத்தின் பல பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்து உள்ளது.

Tags :
|