Advertisement

ராஜஸ்தான், மிசோரமில் மிதமான நிலநடுக்கம்

By: Karunakaran Sat, 04 July 2020 1:07:43 PM

ராஜஸ்தான், மிசோரமில் மிதமான நிலநடுக்கம்

கடந்த சில வாரங்களுக்கு முன் மிசோரம் மாநிலத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் அங்கு பலத்த சேதங்கள் ஏற்பட்டன. இந்நிலையில், நேற்று மதியம் 2.35 மணி அளவில் மிசோரம் மாநிலத்தின் சம்பாம் நகரில் நிலநடுக்கம் ஏற்பட்டது.

இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.5 புள்ளிகள் அளவில் ஏற்பட்டது. இந்த லேசான நிலநடுக்கம் பூமிக்கு அடியில் 52 கிலோ மீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் உயிரிழப்புகள் மற்றும் காயங்கள் ஏற்பட்டதாக எந்த தகவலும் வெளியாகவில்லை.

mizoram,rajasthan,earthquake,buildings ,மிசோரம், ராஜஸ்தான், பூகம்பம், கட்டிடங்கள்

இதேபோல், ராஜஸ்தான் மாநிலம் ஆழ்வார் மாவட்டத்தில் நேற்று இரவு 7 மணி அளவில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 4.7 புள்ளிகளாக பதிவான இந்த நிலநடுக்கம் பூமிக்கு அடியில் 35 கிலோ மீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலநடுக்கம் ஏற்பட்டபோது, வீடுகள், கடைகள் உள்ளிட்ட கட்டிடங்கள் லேசாக குலுங்கியது. இதனால் பீதியடைந்த மக்கள் வீதிகளில் தஞ்சம் அடைந்தனர். இந்த நிலநடுக்கம் தலைநகர் டெல்லி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் உணரப்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.

Tags :