Advertisement

உத்தரகாண்டில் இன்று மித அளவிலான நிலநடுக்கம்

By: vaithegi Sun, 22 Jan 2023 11:34:20 AM

உத்தரகாண்டில் இன்று மித அளவிலான நிலநடுக்கம்

உத்தரகாண்ட் : உத்தரகாண்டில் இன்று காலை மித அளவிலான நிலநடுக்கம் உணரப்பட்டு உள்ளது என தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

உத்தரகாண்டின் பிதோராகார் நகரில் இருந்து 23 கிலோ மீட்டர் வடக்கு வடமேற்கே பகுதியில் இன்று காலை சுமார் 8.58 மணியளவில் மித அளவிலான நிலநடுக்கம் ஒன்று உணரப்பட்டு உள்ளது.

இதனை அடுத்து இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 3.8 ஆக பதிவாகி உள்ளது. நிலநடுக்கம் 10 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்தது என்று தேசிய நிலநடுக்க அறிவியல் மையம் தகவல் தெரிவித்து உள்ளது.

earthquake,uttarakhand ,நிலநடுக்கம்,உத்தரகாண்ட்

இதனால், அந்த பகுதி மக்கள் பெரும் அதிர்ச்சி அடைந்தனர். உத்தரகாண்டில், கடந்த சில வாரங்களுக்கு முன் நில பகுதிகள் பூமியில் மூழ்கும் ஆபத்து ஏற்பட்டது.

மேலும் கட்டிடங்கள், வீடுகளில் விரிசலும் ஏற்பட்டு மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இந்நிலையில், நிலச்சரிவு, கட்டிட விரிசல் ஆகியவற்றுடன் நிலநடுக்கமும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. இருப்பினும், பொருள் இழப்புகள் உள்ளிட்ட விவரங்கள் எதுவும் உடனடியாக வெளிவரவில்லை.

Tags :