Advertisement

இன்று இந்த 20 மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு

By: vaithegi Sun, 25 Dec 2022 7:16:25 PM

இன்று இந்த 20 மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு

சென்னை: மிதமான மழை ... தென்மேற்கு வங்க கடல் பகுதிகளில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை காலையில் குமரிக்கடல் மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் நிலவக்கூடும் எனவும் இதன் காரணமாக தமிழகத்தில் இன்று தூத்துக்குடி, இராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இதேபோன்று நாளை கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, இராமநாதபுரம், தேனி, தென்காசி, விருதுநகர், சிவகங்கை, புதுக்கோட்டை தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என அறிவித்துள்ளது.

rainy,chennai ,மழை ,சென்னை

இதையடுத்து இந்த நிலையில், தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 20 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

அதாவது சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், விழுப்புரம், திருவண்ணாமலை, திருப்பத்தூர், தருமபுரி, சேலம், நாமக்கல், கள்ளக்குறிச்சி, கடலூர், அரியலூர், பெரம்பலூர், திருச்சி, தஞ்சாவூர், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி உள்ளிட்ட 20 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
|