Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • இன்று தமிழகத்தின் சில பகுதிகளில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு

இன்று தமிழகத்தின் சில பகுதிகளில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு

By: vaithegi Tue, 28 Feb 2023 10:55:05 AM

இன்று தமிழகத்தின் சில பகுதிகளில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு

சென்னை: அடுத்த 3மணி நேரத்தில் தமிழகத்தின் சில பகுதிகளில் மிதமான மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. கடந்த சில நாட்களாக சென்னை உள்பட தமிழகம் முழுவதும் வறண்ட வானிலை நிலவி கொண்டு வருகிறது.

எனினும் கீழடுக்கு சுழற்சி மற்றும் ஒரு சில காரணங்களால் பிப்ரவரி 28 முதல் மார்ச் 2-ம் தேதி வரை தமிழகத்தின் டெல்டா மாவட்டங்கள் உட்பட ஒரு சில பகுதிகளில் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

rainy,chennai ,மழை ,சென்னை

அந்த வகையில் இன்னும் 3 மணி நேரத்தில் நாகப்பட்டினம் திருவாரூர் சிவகங்கை இராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் மிதமான மழை அல்லது லேசான மழை பெய்ய வாய்ப்பு என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதனை அடுத்து சென்னை உள்பட மற்ற பகுதிகளில் இன்றும் வறண்ட வானிலை தான் இருக்கும் என்றும் கூடுதல் ஆன வெப்பம் இருக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Tags :
|