Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • தமிழகத்தில் இன்று இந்த 9 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் இன்று இந்த 9 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு

By: vaithegi Tue, 20 Dec 2022 09:36:22 AM

தமிழகத்தில் இன்று  இந்த 9 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு

சென்னை: தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவுகிறது. இது அடுத்த 2 தினங்களில் இலங்கை கடற்கரையை நோக்கி மெதுவாக நகரக்கூடும். எனவே இதன் காரணமாக, இன்று முதல் 23ஆம் தேதி வரை தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதிலும் குறிப்பாக 23ஆம் தேதி தமிழக கடலோர மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களிலும், உள் தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

rain,rain,road , மழை,புதுவை ,காரைக்கால்

இதனை அடுத்து இராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் 9 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும் கடலூர் ,திருவாரூர், நாகை ,மயிலாடுதுறை, கோவை ,திருப்பூர், தென்காசி ,நெல்லை, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தனது முன்னறிவிப்பில் கூறியுள்ளது.

Tags :
|
|