Advertisement

இன்று 19 மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு

By: vaithegi Sun, 25 Dec 2022 10:12:31 AM

இன்று 19 மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு

சென்னை: தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக இன்று தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய 8 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.

இந்த நிலையில், தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் 19 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

rainy,chennai ,மழை ,சென்னை


எனவே அதன்படி, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், நாகை, மயிலாடுதுறை, தஞ்சை, திருவாரூர், ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி, அரியலூர், புதுக்கோட்டை, கோவை, நெல்லை ஆகிய மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது.

இந்நிலையில், சென்னை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. அதிகாலையில் இருந்தே எழும்பூர், புரசவைவாக்கம், திருவல்லிக்கேணி, நுங்கபாக்கம், மெரினா, பட்டினப்பாக்கம், அடையாறு, கிண்டி, தி.நகர். சைதாப்பேட்டைம் கோயம்பேடு, ஆலந்தூர், நங்கநல்லூர், மேடவாக்கம், அண்ணாநகர், அம்பத்தூர், மேடவாக்கம், பல்லாவரம், குரோம்பேட்டை, தாம்பரம், பம்மல், குன்றத்தூர் உளிட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது.

Tags :
|